சசிகுமார் நடிப்பில் மை லார்ட் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
டூரிஸ்ட் பேமிலி மாபெரும் வெற்றியை அடுத்து சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மை லார்ட் (My Lord). ஜோக்கர், ஜிப்ஸீ, ஜப்பான படங்களை இயக்கிய எல்.ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலரில் சசிகுமாரின் எதார்த்தமான நடிப்பும், ராஜு முருகனின் சமூக அக்கறையுள்ள கூர்மையான வசனங்களும் படத்தை ஒரு அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளதை காட்டுகிறது. சொல்லபோனால் ஜோக்கருக்கு பின் ராஜுமுருகனின் வசனங்கள் இப்படத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது டிரைலரில் தெரிகிறது.
டிரைலரைப் பார்க்கும்போது, கிட்னி திருட்டு தொடர்பான கதை களம் போன்று தெரிகிறது. ஜப்பான படத்தின் படு தோல்விக்கு பிறகு இப்படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ராஜு முருகன் தனது முழு பலத்தையும் இந்தப் படத்தில் காட்டியிருப்பது போல் தெரிகிறது.




