Connect with us

Cinema History

என் மகன் தான் தமிழ்நாட்டின் அடுத்த சி.எம் .. எஸ்.ஏ.சியின் ஆசை.. விஜயகாந்த் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் பாண்டிங் ஒரு கட்டத்தில் ரொம்பவே அதிகமாக இருந்தது. அப்பா பேச்சை தட்டாத பையன். மகனுக்காக எதையும் செய்யும் தந்தை. இவர்கள் இப்போது சண்டையில் இருந்தால் கூட மகன் மீது சந்திரசேகர் பெரிய கனவையே வைத்திருந்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் புரட்சி இயக்குனர் என்ற பெயரை பெற்றவர்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை தொடர்ந்து சின்னம்மாவிடமும் இருந்து வந்த மிரட்டல்! சசிகலா தூண்டுதலில் விஜய் நடித்த படம்

அவரின் படம் என்றாலே மிகப்பெரிய ஹிட் என்ற நிலை உருவாகியது. கேப்டன் விஜயகாந்த்தை வைத்து 17 படங்களை தொடர்ந்து இயக்கினார். புரட்சி தமிழன் என்ற பட்டத்தினை வாங்கி கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் தன் மகன் நடிகனாக வேண்டும் எனக் கேட்டபோது இது சரிப்பட்டு வராது என முதலில் மறுத்து விட்டார். அதன்பிறகு அவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவரே படங்களை இயக்கி அறிமுகம் செய்து வைத்தார்.

வளர்ந்து வந்த காலத்திலேயே தன் மகன் கண்டிப்பாக சி.எம் தான் என எஸ்.ஏ.சந்திரசேகர் ஆசைப்பட்டாராம். அதுகுறித்து அவர் நண்பரும், நடிகருமான தங்கராஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கர்வத்தில் எம்.எஸ்.வி செய்த செயல்… ஒரே பாடலால் கண்ணீர் விட வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

அவர் பேட்டியில் இருந்து, விஜயகாந்த் நடிக்காமல் நான் வீடு திரும்ப மாட்டேன் என கலங்கி நின்றபோது அவரின் தந்தை சரி போ உன் கொடி தமிழ்நாட்டில் பறக்கட்டும் என்றார். அதுபோலவே நடந்தது.

அதை மாதிரியே, விஜயை அறிமுக செய்ய செந்தூர பாண்டியன் படத்துக்கு விஜயகாந்திடம் நான்தான் சிபாரிசு செய்தேன். அந்த படத்தை எனக்கு காட்டவில்லை. அவரிடம் கேட்ட போது உடனே ஜெமினி லேபில் ஷோ ஏற்பாடு செய்தார். நைட் பார்த்துவிட்டு அவர் முன் போய் நின்றேன்.

என்னை அவரின் பழைய சைக்கிள் அலுவலகம் அழைத்து சென்றபோது படம் குறித்து கேட்டார். ஹிட்டுனு சொன்னேன். உடனே சந்தோஷமான அவர் எனக்கும், விஜயுக்கும் ராஜயோகம். அவன் தான் தமிழ்நாட்டு உடைய அடுத்த சி.எம் என்றார். இதனால் தான் பெரியவர்களிடம் பழகும்போது கவனமாக இருப்பேன்.

இதை விஜயகாந்திடம் சொன்ன போது அவர் சிரித்துக்கொண்டே கண்டிப்பாக நடக்கும் என்றார். அவர் என்றுமே அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசவே மாட்டார். அத்தனை நல்ல மனிதர் எனக் கூறி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top