லவ் டுடே பிரதீப்புடன் நடிக்கும் ஆர்வக்கோளாறு நடிகர்!.. அவர் ஒரு மாதிரி!.. மண்ட பத்திரம் தம்பி!..

by சிவா |
pradeep
X

Pradeep ranganathan; ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன்.. பார்ப்பதற்கு சின்ன பையன் போல இருக்கிறாரே என அப்போதே பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார். ஆனால், கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் அவரே ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் வெளியானது.

‘நல்லாத்தான போய்ட்ருக்கு’ என ரசிகர்கள் நினைத்தபோது லவ் டுடே என்கிற படத்தில் அவர் ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் வெளியானது. அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின்னர் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கூட அவரை தேடி வந்தது.

இதையும் படிங்க: ஷாருக்கானுக்கே விபூதி அடித்த விஜய்!.. குறுக்கே வந்த கெளசிக் கமல்ஹாசன்!.. என்ன ஆகப் போகுதோ?..

ஆனால், இனிமேல் நான் இயக்கும் படங்களில் நானே ஹீரோவாக நடிப்பேன் என சொல்லி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்போதுதான் விக்னேஷ் சிவன் உருவாக்கிய ஒரு கதை இவரை தேடிவர அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை முதலில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், பட்ஜெட் ரூ.60 கோடி என விக்னேஷ் சிவன் சொன்னதும் ராஜ்கமல் பிலிம்ஸ் பின்வாங்கிவிட்டது. இப்போது இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் வேலைகள் இப்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பு அசுரன் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: ரெட் கார்ட் கொடுத்தது தப்பு தான்… ப்ரதீப் ஆண்டனிக்கு பெத்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவி..! கெத்து மேன் கெத்து…

இந்நிலையில், இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கினும் இப்படத்தில் நடிக்கவுள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகி வருவதாலும், லியோ படம் மூலம் மிஷ்கினும் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளதால் அவர்கள் இருவரையும் இந்த படத்தில் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருக்கிறாராம்.

மிஷ்கின்

மிஷ்கின்

அதேநேரம் பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது தன் வேலையை காட்டுவார் மிஷ்கின். இயக்குனருக்கே கிளாஸ் எடுப்பார். அவரிடம் விக்னேஷ் சிவனும், பிரதீப்பும் எப்படி மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மோசமா கதை சொல்றவன் முதலிடத்தில் இருக்கான்!. விஜய் – லோகேஷை சொன்னாரா கோபி நாயனார்!?.

Next Story