கமலிடம் கதை சொல்லபோய் பல்பு வாங்கிய மிஷ்கின்.. அசிங்கமா போச்சி குமாரு!..

by சிவா |
myskin
X

myskin

ஐந்து வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். கடந்த 60 வருடங்களுக்கும் மேல் பல்வேறு விதமான கதாபாத்திரங்களிலும், கெட்டப்புகளிலும் நடித்தவர். சினிமா இவருக்கு அத்துப்படி. நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்தவர்.

kamal

kamal

சினிமாவை மிகவும் ஆழமாக கற்றுக்கொண்டவர். தமிழில் மட்டுமில்லை மற்ற மொழி மற்றும் மற்ற நாட்டு சிறந்த திரைப்படங்களையும் பார்த்துவிடுவார். அதேபோல், சிறந்த படிப்பாளியும் கூட. தமிழில் எல்லா சிறந்த நாவல்களையும் படித்தவர் இவர். புதிதாக ஒரு புத்தகம் வந்தால் உடனே ரிசர்வ் செய்து விடுவார். எனவே, இவரிடமெல்லாம் கதை சொல்லப்போனால் அது புதிய கதையாக அந்த இயக்குனரே யோசித்த சிறந்த கதையாக இருக்க வேண்டும். இல்லையேல் அவர் வீட்டின் காம்பவுண்ட் உள்ளே கூட நுழைய முடியாது.

தமிழில் பல வித்தியாசமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். கமலை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்பட்ட மிஷ்கின் ஒருமுறை அவரை சந்தித்து கதைகளை சொல்ல ஆரம்பித்துள்ளார். ஒரு காட்சியை கேட்டதும் ‘இது அந்த ஆங்கில படத்தில் வந்துள்ளது’, ‘இது அந்த ஜப்பான் படத்தில் வந்துள்ளது’ என கமல் சொல்ல, மிஷ்கின் வேறொரு கதையை சொல்ல ‘இது அந்த நாவலில் வந்துவிட்டது’ என சொல்ல இவருக்கு கதை சொல்வது கஷ்டம் என நினைத்துவிட்டு ‘அப்புறம் வந்து உங்களை பாக்குறேன் சார்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து மிஷ்கின் ஓடிவந்துவிட்டாராம்.

நிறைய சீன மற்றும் ஜப்பான் கதைகளை சுட்டு படமெடுப்பவர் மிஷ்கின். ஆனால், அவரின் பாட்சா கமலிடம் பலிக்கவில்லை என இதை சொல்லி திரையுலகமே சிரித்ததாக ஒரு பேச்சு உண்டு.

Next Story