மிஷ்கினின் அடுத்த படத்தில் ஹீரோ அவர்தான்!...ரெண்டு பேருக்கும் சரியா இருக்கும்...
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் மிஷ்கின். தற்போது ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றது.
இந்நிலையில், இப்படத்திற்கு பின் எஸ்.ஜே. சூர்யா மற்றும் விதார்த் என இருவரும் நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளார். இப்படத்தை பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
மிஷ்கின் படத்தில் நடிக்கும் கதாநாயகனின் கதாபாத்திரம் எப்போதுமே இயல்பான ஒன்றாக இருக்காது. எஸ்.ஜே.சூர்யாவும் கொஞ்சம் இயல்பை மீறி நடிக்கும் நடிகர் ஆவார். எனவே, இருவரும் சேர்ந்தால் பொருத்தமாகத்தான் இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.