Myskkin vijay sethupathi: சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனராக களம் இறங்கியர் மிஷ்கின். வித்தியாசமான காட்சி அமைப்பு, கதை சொல்லல் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜயே இந்த கதையை என்னிடம் சொல்லி இருந்தால் நடித்திருப்பேனே என மிஷ்கினிடம் சொன்னார்.
அதன்பின் அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கினார். வித்தியாசமான கேமரா ஆங்கிளில் கதை சொல்வது மிஷ்கின் ஸ்பெஷல் ஆகும். கதாபாத்திரத்தின் காலை மட்டுமே காண்பித்தே காட்சிகளை புரிய வைத்துவிடுவார்.
இதையும் படிங்க: போர் அடிக்குது.. என்ன செய்யிறதுனு தெரியலை.. அதான் இதை செய்ய போறேன்.. மிஷ்கின் தடாலடி..!
ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. ஒருபக்கம் சினிமாவில் நடிகராகவும் மிஷ்கின் மாறிவிட்டார். நந்தலாலா படத்திலும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்த மிஷ்கின் அதன்பின் கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்திலும் அசத்தல் வில்லனாக நடித்திருந்தார். அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்போது அடுத்த படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கால்ஷீட் கொடுத்தவரையே கலாய்த்த மிஷ்கின்… வாய அடக்கி பேசுங்க டைரக்டர் சார்!..
கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குவது பற்றி சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகிவிட்டது. இந்த மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்த படத்திற்கு ‘டிரெய்ன்’ என தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, ஒரு ரயிலை சுத்தி கதை நகரும் ஒரு திரில்லர் படம் என கணிக்கப்படுகிறது. அதோடு, இந்த படத்தில் ஜெயராம் வில்லனாக நடிக்கவுள்ளாராம். தளபதி 68படத்திலும் ஜெயராம் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேரனோட சரக்கு போட்டு செம டேன்ஸு!.. இவ்வளவு ஓப்பனாவா சொல்லுவாரு மிஷ்கின்!…
