Connect with us

Cinema History

மனதை ரணமாக்கி மர்மமாக மறைந்து போன தமிழ்ப்பட நாயகிகள் – ஒரு பார்வை

தமிழ்சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல இளம் கதாநாயகிகள் 90கள் மற்றும்2000காலகட்டங்களில் திடீர் தீடீர் என மர்மமான முறையில் இறந்துபோனாங்க. இதுகுறித்து அப்போதைய ரசிகர்களின் மத்தியில் பலவிதமான கருத்துகள் நிலவின. அவற்றில் ஒரு சில நடிகைகளின் மர்ம மரணம் குறித்துப் பார்ப்போம்.

சில்க் ஸ்மிதா

Silk smitha

80களில் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத கவர்ச்சி கன்னியாக நடிகை சில்க் உலா வந்தார். அப்போதைய காலகட்டத்தில் திரைத்துறையில் பல முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அளவில் இவரது நடிப்புத்திறனும், கவர்ச்சியும் இருந்தது. கிறங்கடிக்கும் இவரது பார்வை ஏராளமான ரசிகர்களைக் கட்டிப் போட்டது. 1996ல் சில்க் அவருக்குச் சொந்தமான ஒரு அபார்ட்மென்ட்டில் இறந்து போனார்.

தூக்கிட்டு தற்கொலை என்ற சேதி காட்டுத்தீயாகப் பரவியது. கடன், காதல் தோல்வியால ஏற்பட்ட குடிப்பழக்கத்தாலும், மன இறுக்கத்தாலும் தான் நடிகை சில்க் இந்த நிலைக்கு ஆளானாங்கன்னு சொல்லப்படுது. ஆனா இன்னும் வரைக்கும் இவங்களோட மரணம் குறித்து சர்ச்சைகள் இருந்துக்கிட்டே இருக்கு.

திவ்யாபாரதி

Actress Divya bharathi

25.02.1974ல் பிறந்துருக்காங்க. இவர் முதலில் நடித்த படம் நிலா பெண்ணே. அதற்குப் பிறகு தமிழில் எந்தப் படமும் நடிக்கல. தெலுங்கு, இந்தியில் தான் நடிச்சாங்க. 1990ல் இருந்து 1993 வரை கிட்டத்தட்ட 23 படங்கள் நடிச்சிருக்காங்க. இவங்க இறக்கும்போது இவரோட வயசு 19 தான். அதுக்குள்ள கல்யாணமும் முடிச்சிட்டாங்க. கோவிந்தா படம் சூட்டிங்கின் போது அங்கிருந்த தயாரிப்பாளரும் இயக்குனருமான சஞ்சத் நட்வாலாவை திருமணம் பண்ணிக்கிட்டாங்க.

அப்போ இவருக்கு 18 வயசு. இஸ்லாம் மதத்திற்கு மாறித் தான் கல்யாணம் முடிச்சிருக்காங்க. 5.4.1993ல் மும்பையில் இருக்குற ஒரு அபார்ட்மெண்ட்ல 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

பிரதியுஷா

Prathiyusha

29.8.1981ல் பிறந்தாங்க. ஆந்திரா தான் இவரது சொந்த மாநிலம். 1998ல் இருந்து 2002வரை 12 படங்கள் பண்ணிருக்காங்க. இவர் முதல்ல டெலிவிஷன் ஸ்டார்ட் 2000ல பங்கேற்று மிஸ் லவ்லி ஸ்மைல் அப்படிங்கற டைட்டில்ல ஜெயிச்சிருக்காங்க.

அதற்கு அப்புறம் அதன் மூலமா கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. தமிழ்ல மனுநீதி, சூப்பர் குடும்பம், பொன்னான நேரம், தவசி, கடல் பூக்கள், சவுண்ட் பார்ட்டி என நிறைய படங்கள் பண்ணிருக்காங்க.

23.02.2002ல் தனது 20வது வயசில ஹைதராபாத்தில் இவரது காதலர் சித்தார்த்துடன் விஷம் குடித்து இறந்தார். இதுக்கு என்ன காரணம்னா இவங்களோட காதல இவங்க குடும்பம் ஒத்துக்கலயாம். ஆனால் இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் மூச்சடைத்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால் அந்த வழக்கு காதலர் சித்தார்த் மேல் திரும்பியது. கடைசியில் தற்கொலைக்குத் தான் முயற்சித்தாக சொல்லி 5 வருஷம் சித்தார்த்துக்கு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டு ரூ.6000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அவர் எப்படி இறந்தார் என்ற உண்மையை அவங்க அம்மாவால் கண்டுபிடிக்க முடியல.

மோனல்

Monal with Simran

26.1.1981ல் பிறந்துருக்காங்க. இவர் சிம்ரனோட தங்கை தான். 2000த்தில இருந்து 2002 வரை தான் சினிமாவில் நடித்துள்ளார். 11 படங்கள் பண்ணிருக்காங்க. முதல்ல மாடலிங், பேஷன் ஷோக்களில் பண்ணிருக்காங்க. அதுக்கு அப்புறமா சிம்ரனை வைச்சி இவருக்கு பட வாய்ப்பு கிடைச்சது.

இவர் முதலில் பத்ரி படத்தில் தான் நடித்தார். ஆனால் பார்வை ஒன்றே போதுமே படம் தான் முதலில் வெளியானது. இவர் இறக்கும்போது வயசு 21 தான். 14.4.2002 அன்று காலை அவரது அடுத்த படமான பேய் ஜென்மத்திற்கான படத்துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

அன்று மாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது இவர் பார்வை ஒன்றே படத்தில் குணாலைக் காதலித்ததாகவும் அதற்கு அவர் அதை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் மீடியாவில் சொல்லப்பட்டது. ஆனால் இவங்க லவ் பண்ணது கோரியோகிராபர் பிரசன்னா சுஜித்ன்னு சிம்ரன் சொன்னாங்க.

சௌந்தர்யா

Soundarya

18.07.1972ல் பிறந்தார். பிறந்து வளர்ந்தது எல்லாமே கர்நாடகாவில் தான். இவரது அப்பா கர்நாடக படத்தின் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். இவர் ஒரு சிறந்த நடிகை. எம்பிபிஎஸ் படிப்பை ஒரு ஆண்டுகாலம் பெங்களூருவில் படித்து விட்டு அதை நிறுத்திவிட்டுத் தான் படம் நடிக்கவே வந்துருக்காங்க.

1992வில் இருந்து 2004 வரை 12 வருஷம் சினிமாவில் நடிச்சிருக்காங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம்னு பல மொழிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் கடைசியாக நடிச்ச படம் சொக்கத்தங்கம். இவன், தவசி, படையப்பா என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். 17.4.2004ல் தேர்தல் பிரசாரத்திற்காக அவரது அண்ணன் அமர்நாத்தின் பாஜக கட்சியை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுருக்காங்க.

100 அடி கூட போகல. அதுக்குள்ள ஹெலிகாப்டர் வெடிச்சி சிதறி இறந்துட்டாங்க. அவரது அண்ணன் தான் இவருக்கு மேனேஜரா இருந்துருக்காங்க. இவர் இறக்கும்போது வயது 32 தான். இதுல ரொம்ப சோகமான விஷயம் என்னன்னா அவங்க இறக்கும்போது 7 மாசம் கர்ப்பமா இருந்துருக்காங்க.

இறக்குறதுக்கு முன்னாடி 3 அனாதை பள்ளிகள் திறந்துருக்காங்க. தற்போது அவங்க அம்மா மஞ்சுளா தான் அமர் சௌந்தர்யா வித்யாலயம் என்ற பள்ளிகளை நடத்திக் கொண்டு வாராங்க.

ஆர்த்தி அகர்வால்

5.3.1984ல் நியூஜெர்சியில் பிறந்துருக்காங்க. இவங்க ஒரு குஜராத் பேமிலி. இவர் 2001ல் பாலிவுட்டில் நடித்துள்ளார். அதுக்கு அப்புறம் தமிழில் பம்பரக்கண்ணாலே படத்தில் நடித்துள்ளார். தெலுங்குல 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2001 முதல் 2015 வரை கிட்டத்தட்ட 16 வருஷம் சினிமாவில் இருந்துள்ளார். 6.6.2015ல் நியூஜெர்சியில் மாரடைப்பால் காலமானார்.

இதுக்குக் காரணம் இவர் மாரடைப்பு வருவதற்கு 6 வாரத்துக்கு முன்னாடி தான் லைப்போ செக்ஷன் சர்ஜரி பண்ணிருக்காங்கன்னு அவங்க மேனேஜர் சொன்னாரு. உடம்புல இருக்குற தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கிற ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி தான் இது.

அனுஷ்கா, நயன்தாரா, சுருதிஹாசன்னு நிறைய பேரு பண்ணிருக்காங்க. ஆனா ஆர்த்திக்கு முன்னாடி சாப்பிட்ட மாத்திரைகளும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்னு சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top