Cinema News
கண்ணதாசனின் அரிய பழக்கத்தைக் கொண்ட இன்னொரு கவிஞர் யார் தெரியுமா?? கேட்கவே வியப்பா இருக்கு!!
கவியரசர் கண்ணதாசன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியராகவும் கவிஞராகவும் திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இப்போதும் கூட கண்ணதாசனின் பாடல்கள் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே வலம் வருகிறதென்றால், எந்த அளவிற்கு அவருடைய வரிகள் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தது என்பதை கேள்விப்படும்போது வியப்பு ஏற்படாமல் இல்லை.
அக்காலகட்டத்தில் மிகவும் பிசியான கவிஞராக இருந்த கண்ணதாசன், சம்பள விஷயத்தில் அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாக இருக்க மாட்டார் என்று பல சினிமா பிரபலங்கள் கூறுவார்கள். அதாவது ஒரு பாட்டுக்கு இவ்வளவு தொகை வாங்கவேண்டும் என்று எந்த நிர்ணயமும் இல்லாமல் பணியாற்றுவாராம் கண்ணதாசன். தயாரிப்பாளர்களிடம் தனக்கு இவ்வளவு தொகைதான் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கவே மாட்டாராம் கண்ணதாசன்.
இந்த நிலையில் கண்ணதாசனின் இந்த குணம், இன்னொரு பிரபல கவிஞருக்கும் இருப்பதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். அந்த கவிஞரின் பெயர் நா.முத்துக்குமார்.
“நா.முத்துக்குமார் மிக இயல்பாக பேசக்கூடிய நல்ல மனிதர். அவர் இவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தபோதிலும் அந்த திறமைக்குரிய தலைக்கணத்தை யாரும் ஒரு நாளும் பார்த்திட முடியாது. அந்த அளவுக்கு எளிமையாக எல்லோரிடமும் பழகக்கூடியவர் அவர்” என சித்ரா லட்சுமணன் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “காசு விசயத்தில் கண்ணதாசன் மாதிரிதான் நா.முத்துக்குமாரும். இந்த பாட்டுக்கு இந்த தொகை வேண்டுமென்று தீர்மானமாக வற்புறுத்திக் கேட்டதே இல்லை” என கூறியிருந்தது கூறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரத்தக்கண்ணீர் படத்துக்கு அப்புறம் எம்.ஆர்.ராதாவுக்கு பட வாய்ப்பே வரலைன்னு சொன்னா உங்களால நம்பமுடியுதா!!
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத கவிஞராக திகழ்ந்த நா.முத்துக்குமார் பல பாடல்களை எழுதியிருந்தாலும், அவரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.
குறிப்பாக 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய பாடலாசிரியராக திகழ்ந்தார் நா.முத்துக்குமார். இவ்வாறு இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த நா.முத்துக்குமார் உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்தார்.