நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? இப்படியே போன என்ன ஆகும்?
வடிவேலு பல வருடம் கழித்து நடித்து வெளிவந்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் தக்லைஃப் கிங்காக இருந்தவர் வடிவேலு. அவரின் போதாத காலமோ என்னவோ தன் வாயாலயே பெரிய சிக்கலில் சிக்கினார். தொடர்ந்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்காமல் பெரிய பிரச்னையே செய்தார். தொடர்ச்சியாக அவருக்கு ரெட் கார்ட் வரை விஷயம் சென்றது.
இந்நிலையில், பல வருடம் கழித்து சுராஜ் இயக்கத்தில் மீண்டும் சினிமாவிற்குள் வந்திருக்கிறார் வடிவேலு. அவரின் ட்ரண்ட் செட்டான கதாபாத்திரம் நாய் சேகர் என்ற பெயருக்கும் முதலில் பிரச்னையானது. அதை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் இந்த படத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: போட்டோக்கு போஸ் கொடுக்கும்போது ரஜினி இதை செய்வார்!.. இதற்கு இவ்வளவு சக்தியா?!…
இணையத்தில் கலவையான விமர்சனங்கள் பெற்ற இந்த படத்திற்கு இளைஞர்கள் கூட்டத்தினை விட குடும்ப ரசிகர்கள் அதிகம் வந்ததாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற பெரும்பாலானவர்கள் சின்னத்திரையை சேர்ந்தவர்கள் தான் என்பதும் இந்த படத்திற்கு பின்னடைவாக இருக்கிறது. பழைய வடிவேலு காமெடி எதுவுமே சொல்லிக் கொள்ளும்படியாகவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அந்தவகையில் முதல் நாள் வசூல் 1 கோடி ரூபாய் தான் எனக் கூறப்படுகிறது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இப்படியே சென்றால் போட்ட பணத்தினை எடுக்க முடியாது என லைகா தரப்பு வடிவேலு மீது கடுப்பில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.