விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்.. நாகார்ஜுனா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

குபேரா படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியூருக்கு செல்ல புறப்பட்டனர். அப்போது நாகார்ஜுனா விமான நிலையத்திற்குள் வரும்போது விமான நிலைய ஊழியர் ஒருவர் நாகார்ஜுன் அருகே வந்து அவரை சந்திக்க முயற்சி செய்தபோது உடனடியாக நாகார்ஜுனாவின் பாடிகாட் அந்த நபரை பிடித்து தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாமல், அந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் நாகார்ஜுனா திமிராக நடந்து சென்றார் என வீடியோக்கள் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் நாகார்ஜுனா அந்த நபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காதும் காதும் வச்ச மாதிரி நடந்த சந்திப்பு! பெரிய நடிகருடன் காதல் வயப்பட்ட மீனா?..

அதன் பின்னர் நாகர்ஜுனா நடிகர் தனுஷை விமான நிலையத்தில் சந்தித்து தனுஷ் மற்றும் அவரது மகன் லிங்கா உடன் பேசிக்கொண்டு செல்லும் வீடியோக்களும் வைரல் ஆகின. இந்நிலையில், சோசியல் மீடியாவில் அந்த வீடியோ வைரலானதை அறிந்து கொண்ட நாகார்ஜுனா அதுதொடர்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அங்கே என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோல இது நடக்காது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாயகன் படத்துக்கு முன்னோடி எந்தப் படம்னு தெரியுமா? அடேங்கப்பா எங்கே போய் சுட்டுருக்காங்கன்னு பாருங்க…!

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடி்ப்புக்காக சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நடிகர் நாகார்ஜுனா சோசியல் மீடியாவின் அந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்ட நிலையில், அவரது ரசிகர்கள் நாகார்ஜுனாவின் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர். தமிழில் ரட்சகன், தோழா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நாகார்ஜுனா தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் தனுஷின் குபேரா படத்தில் பணக்காரர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷ் பிச்சைக்காரராக நடித்து வரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் 15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!.. கிலோ கணக்கில் நகை கொடுத்த நடிகர்..

 

Related Articles

Next Story