காதும் காதும் வச்ச மாதிரி நடந்த சந்திப்பு! பெரிய நடிகருடன் காதல் வயப்பட்ட மீனா?..

Actress Meena: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமான மீனா அதனைத் தொடர்ந்து எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பார். அந்த நேரத்தில் மீனா மிகவும் கொழுக்மொழுக் என மிகவும் உடல் எடை அதிகரித்து இருந்ததால் நடிகைகள் தூக்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்களாம்.

அந்த படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருப்பார். அதில் அவர் அழைக்கும் 'ரஜினி அங்கிள்' என்ற ஒரு வசனம் இன்று வரை அவருக்கு ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இப்படி குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா ஹீரோயின் ஆகவும் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்தினார்.

இதையும் படிங்க: பிளாப் கொடுத்தும் அதிக சம்பளம் கேட்ட ஜெயம் ரவி!.. வாய்ப்பை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி

அதில் அவர் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முதல் படமாக அமைந்தது என் ராசாவின் மனசிலே திரைப்படம். ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்த மீனா அந்த படத்தில் இருந்து மக்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை பக்கபலமாக இருப்பது அவருடைய அம்மா தான். அவருடைய கால்ஷீட் எல்லாவற்றையும் மீனாவின் அம்மா தான் பார்த்துக் கொள்வார். அவருடைய கெரியரில் மிஸ் பண்ண மிக முக்கிய படங்களும் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் படையப்பா, முதல்வன் போன்ற படங்களை சொல்லலாம் .

இதையும் படிங்க: பலான சீன்! நடிகையிடம் சைஸ் கேட்ட கமல் பட நிறுவனம்.. அப்புறம் என்னாச்சு தெரியுமா?

அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதுவும் அவருடைய கணவர் இறந்த பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அதாவது பிரபல அரசியல்வாதியுடன் அவருக்கு இருக்கும் உறவு ,தனுஷை மறுமணம் செய்ய இருக்கிறார் போன்ற சர்ச்சைகள் எல்லாம் கிளம்பி வருகின்றன.

ஆனால் இதைப் பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறுகையில் திருமணத்திற்கு முன்பே மீனாவுக்கு ஒரு பெரிய நடிகருடன் காதல் ஏற்பட்டது என்றும் சென்னையில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு என ஒரு தனியாக அறை ஒதுக்கி விடுவார்களாம். அந்த அறையில் இருவரும் ரகசிய சந்திப்பு நடத்துவார்களாம். ஆனால் அது காதும் காதும் வச்ச மாதிரி அப்படியே மறைந்து போனது என்று சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி மட்டுமல்ல… ஷங்கர் எவ்வளவோ சொல்லியும் கமல் மறுத்த படங்கள்…இப்படியா மிஸ் பண்ணுவாங்க…

 

Related Articles

Next Story