ரஜினி மட்டுமல்ல... ஷங்கர் எவ்வளவோ சொல்லியும் கமல் மறுத்த படங்கள்...இப்படியா மிஸ் பண்ணுவாங்க...

ஷங்கரின் இயக்கத்தில் கமல் இந்தியன், இந்தியன் 2, இந்தியன் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதே நேரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரது இயக்கத்தில் எந்திரன், 2.ழ, சிவாஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஷங்கர் கமலின் தீவிர ரசிகர். அதனால் அவர் முதல் படத்தை இயக்கும்போது கமல் தான் நடிக்கணும் என்பதில் தீவிரமாக இருந்தாராம். ஜென்டில்மேன் கதையை கமலுக்காகத் தான் எழுதினாராம். அந்தக் கதையை நுணுக்கமாகவும், துல்லியமாகவும் கமலிடம் சொன்னாராம். இந்தக் கதையில் கமலுக்குக் கருத்து வேறுபாடு இருந்ததாம். கமலின் மெகா ஹிட் படமான குருவின் தழுவலாக இருந்ததாம்.

அதனால் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க தயக்கம். இந்தப் படத்தில் வரும் ராமன் கேரக்டர் மாதிரி ஏற்கனவே மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒரு கேரக்டர் வருமாம். அதை நாம் நடிச்சிருக்கோமே என்ற சந்தேகம் கமலுக்கு வர அதை ஷங்கரிடம் சொன்ன கமல் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

GM

GM

எந்த ஒரு நடிகரும் முதல் படத்தில் நிரூபிக்காத டைரக்டருக்கு வாய்ப்பு தரமாட்டாங்க. அதுக்கு கமலும் உதாரணம். அதே போல கமல் இன்னொரு படத்தையும் தவற விட்டு விட்டார். அது முதல்வன். எல்லாருக்கும் முதல்வன் என்றதுமே அது சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை. அதன்பிறகு விஜய் தான் நடிப்பதாக இருந்தது என்று சொல்வார்கள்.

ஆனால் ஷங்கரே சொன்னது என்னன்னா விஜயைத் தொடர்பு கொண்டும் சரியான தகவல் இல்லை. அதே நேரத்தில் ரஜினியும் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னாராம். அதனால் கமல் ஹீரோவா நடிச்சா எப்படி இருக்கும்னு ஷங்கர் யோசித்தாராம். ஆனா அவர் நடிக்கிறதா இருந்தா ஹீரோ கேரக்டருக்கு இன்னும் ஸ்ட்ராங்க் பண்ணனும்கற முடிவில் இருந்தாராம்.

அப்போது மருதநாயகம் ட்ராப் ஆனதால் அந்தக் கோபத்தில் இன்னொரு பீரியட் படத்தை எடுத்தே ஆகணும்கற எண்ணத்துல ஹேராம் படத்தை இயக்குவதில் முழுமூச்சாக இருந்தாராம். ஹேராம் படத்தில் பிசியாக இருப்பதால் என்னால் நடிக்க முடியல. இன்னும் 1 வருடம் ஆகும். அதனால நீங்க வெயிட் பண்றதா இருந்தா எடுங்க. இல்லன்னா வேற ஹீரோவை வச்சி எடுங்கன்னு சொன்னாராம். அதுக்கு அப்புறம் தான் அர்ஜூன் நடித்து அந்தப் படம் மெகா ஹிட் ஆனதாம்.

அதுக்குப் பிறகு கமல் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க முடியாத படம் ரோபோ. அந்தப் படத்திற்கான போட்டோ ஸ்டில்கள் எல்லாம் வந்தன. அப்பவே 40 கோடி பட்ஜெட்ல நடக்கவே இருந்ததாம். அப்போது மீடியா ட்ரீம்ஸ் தான் தயாரிக்க இருந்ததாம். ஆனா அந்த நிறுவனம் தயாரிச்ச சில படங்கள் சரியா போகாததால படம் டிராப் ஆகிடுச்சாம்.

Enthiran

Enthiran

அதன்பிறகு வேற வழியே இல்லாமல் கதைல கொஞ்சம் மாற்றி ரஜினிக்கு ஏற்ப மாத்தி எடுத்தாராம். கமல் நடிக்க வேண்டிய கதைல நான் நடிக்க முடியுமான்னு கேட்டாராம். அதுக்கு நிறைய மாற்றம் செஞ்சிருக்கேன். தாராளமா நடிக்கலாம்னு சொல்லவும் ஓகே சொன்னாராம் ரஜினி.

அதே மாதிரி ரஜினியும் ஷங்கர் இயக்கத்தில் சில படங்களை மிஸ் பண்ணிருக்காரு. ஜென்டில்மேன், முதல்வன் படங்களை ரஜினியும் மறுத்துள்ளார். இந்தியன் படத்துக்கு ரஜினிக்காகவும் கதை சொன்னாராம் ஷங்கர். அது பெரிய மனுஷன் என்ற பெயரில் சொன்னாராம்.

அதுல 75 வயது முதியவர் கெட்டப் என்றதும் ரஜினி நடிக்க மறுத்து விட்டாராம். அதே நேரம் கமலுக்கு 2 கெட்டப்பும் நீங்க தான் என்றாராம். ஐ படத்துக் கதையும் ரஜினியிடம் சொல்லப்பட்டதாம். அதைக் கேட்டதுமே ரஜினிக்கு பிடித்து விட்டதாம். ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லையாம்.

 

Related Articles

Next Story