அம்மாடியோ!.. இத்தனை கோடியா?.. மகன் திருமணத்திற்கு நாகார்ஜுனாவின் காஸ்ட்லி பரிசு!..

nagarjuna
நடிகர் நாகார்ஜுனா தனது மூத்த மகன் நாக சைதன்யா திருமணத்திற்காக காஸ்ட்லி பரிசு ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவரது மூத்த மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகின்றார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: யாரு ஹீரோன்னே தெரியல!.. ஒரு டிவிஸ்ட்டும் இல்ல!.. சொர்க்கவாசலுக்கு புளூசட்டை மாறன் விமர்சனம்!..
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அப்போது நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் பரவி வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யா மற்றும் சோபிதா நிச்சயதார்த்தம் எளிமையாக உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது.

car gift
வரும் டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள், திரைப்படங்கள், அரசியல் பிரபலங்கள் என 300-க்கும் மேற்பட்டோர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மகனின் திருமணத்திற்காக நாகார்ஜுனா ஒரு பரிசை வழங்க முடிவு செய்து இருக்கின்றார். நடிகர் நாக சைதன்யாக்கு கார் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் விலைமதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசளிப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார். இந்த காரை 2.5 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க:ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சொர்க்கவாசல்!.. முதல் நாள் எவ்வளவு வசூல் தெரியுமா?..
இது லெக்ஸஸ் LM MPV மாடல் கார் ஆகும். இந்த கார் ஹைபிரிட் எலக்ட்ரிக் வடிவமைப்பிற்கு பெயர் போனது. கார்பன் நியூட்ரல் தாக்கத்தை இந்த கார் ஊக்குவிக்கும். இதன் விலை மட்டும் 2.5 கோடி கூறப்படுகின்றது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மகனின் திருமணத்திற்கு பரிசாக வழங்க வேண்டும் என்பதற்காக இந்த காரை புக் செய்து ஆர்டிஐ பதிவு செய்து இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கின்றார் நடிகர் நாகார்ஜுனா.