லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..

Published on: January 12, 2024
Nagesh2
---Advertisement---

தமிழ்ப்பட உலகில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவரைப் போல வேறு எந்த நடிகருக்கும் பாடி லாங்குவேஜ் வராது. மனிதர் டைமிங் காமெடியிலும் பின்னி விடுவார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் பெரும்பாலும் காமெடியனாகக் கொடி கட்டிப் பறந்தவர் நாகேஷ் தான்.

இவரது ஏடாகூடமான பேச்சு பார்க்கும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி விடும். இதே உணர்வு நிஜத்திலும் இவருக்கு இருந்ததாம். தனது வெகுளித்தனமான கேள்விகளால் பலரின் கோபத்தையும் சம்பாதித்துள்ளார்.

இதையும் படிங்க: சுந்தர் சி-யிடம் வாய்ப்பு கேட்ட நாகேஷ்!. அதுவும் எப்படி தெரியுமா?.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

இவரது ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்ததும் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். அங்கு இருந்து கொண்டே இதற்கான வாய்ப்பைத் தேடினார். ஒரு முறை அலுவலகம் சென்ற போது மறுநாள் நாகேஷுக்கு மேனேஜரிடம் நாடக ஒத்திகைக்கு லீவு கேட்க வேண்டி இருந்தாம்.

என்ன செய்வது என்று யோசித்தார். மளமளவென கடிதம் ஒன்றை எழுதினார். மேனேஜரிடம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த மேனேஜர் நாகேஷைத் திட்டி லீவெல்லாம் கிடையாது. நாளைக்கு ஆபீஸ் கண்டிப்பா வரணும்னு சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க… தனுஷ் ஒன் மேன் ஷோ!. எபிக் பிளாக்பஸ்டர்!.. கேப்டன் மில்லர் டிவிட்டர் விமர்சனம்…

இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற நாகேஷ் அதை மேனேஜரிடம் காட்ட முடியாமல் அவரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்தாராம். மறுநாள் ஆபீசுக்கு டவுசர், பனியனுடன் வந்தாராம். இதைப் பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். மேனேஜர் கோபம் கொண்டு ‘ஏன் இந்த டிரஸில் வந்துருக்கே?’ என கேட்டாராம்.

Nagesh
Nagesh

எனக்கு இருப்பதோ 2 பேண்ட், 2 சர்ட் தான். ஒண்ணு நேற்று தான் போட்டேன். இன்னொன்னு மழையில் நனைந்து விட்டது. அதைப் போட்டால் எனக்கு ஜலதோஷம் பிடிக்கும். அதனால் தான் இப்படி வந்தேன். இதை வெளியே சொல்ல முடியாத காரணத்தினால் தான் லீவு கேட்டேன் என்று சொல்ல அதன்பிறகு லீவு கிடைத்தாம். நாடக ஒத்திகைக்கும் போய் விட்டாராம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.