Connect with us
nagesh

Cinema News

சுந்தர் சி-யிடம் வாய்ப்பு கேட்ட நாகேஷ்!. அதுவும் எப்படி தெரியுமா?.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

Actor nagesh: 1950 முதல் 2000 வரை தமிழ் திரைப்படங்களில் கலக்கியவர்தான் நடிகர் நாகேஷ். பார்த்து வந்த மத்திய அரசு வேலையை கூட சினிமாவுக்காக தூக்கி எறிந்தவர் இவர். சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் வெற்றிக்கே நாகேஷ் தேவைப்பட்டார். எனவே, நாகேஷுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். ஒரேநாளில் 5 திரைப்படங்களில் நடிப்பார் நாகேஷ். உடலை வளைத்து நெளிந்து அவர் ஆடும் நடனம் எல்லாம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.

இதையும் படிங்க: சிகரெட்டுக்கு வந்த தடை!.. கறார் காட்டிய தயாரிப்பாளர்!.. நாகேஷ் செஞ்சதுதான் ஹைலைட்!…

காமெடியனாக மட்டிமில்லாமல் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அதில், எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம் ஆகியவை முக்கியமான திரைப்படங்களாகும். காமெடி காட்சிகளில் மட்டுமில்லை. குணச்சித்திர வேடங்களிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அழவைத்துவிடுவார்.

நடிகர் கமலுக்கு இவரை மிகவும் படிக்கும். எனவே, அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நாகேஷை நடிக்க வைப்பார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பார். மகளிர் மட்டும் படத்தில் பிணமாக கூட நடித்து அசத்தியிருப்பார். அப்படிப்பட்ட நடிகரே ஒரு இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டார் என நம்ப முடிகிறதா?.

இதையும் படிங்க: சார்லி சாப்ளின் வேஷம்தான் உனக்கு சரி… அப்படி சொன்ன பாலசந்தரையே பயப்படவச்ச நாகேஷ்…

அது உண்மையில் நடந்தது. அவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இவரின் படங்களில் காமெடி காட்சிகள் தூக்கலாக இருக்கும். ஒருமுறை அவர் ஸ்டுடியோவில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது இவரை தாண்டி சென்ற ஒரு கார் நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்க ‘யார் இது?’ என பார்த்த சுந்தர் சி-க்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. காரிலிருந்து இறங்கி அவரை நோக்கி நடந்து வந்தவர் நாகேஷ்.

அவரை பார்த்ததும் காலில் விழுந்துள்ளார் சுந்தர் சி. ‘என் பெயர் நாகேஷ்.. ஓரளவுக்கு நடிப்பேன்.. இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.. என்னை உங்கள் படங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என சொன்னாராம். இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன சுந்தர் சி தனது அடுத்த படத்தில் நாகேஷை கண்டிப்பாக நடிக்க வைக்க வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்தாராம். ஆனால், இரண்டு மாதங்களில் இறந்துவிட்டார் நாகேஷ்.

‘நாகேஷ் சாரை என் படங்களில் பயன்படுத்தாமல் விட்டு விட்டேன் என்கிற இழப்பு ஒவ்வொரு நாளும் என்னை உறுத்திகொண்டேதான் இருக்கிறது’ என சுந்தர் சி ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தியேட்டருக்கு வந்த சிக்கல்!.. நாகேஷ் சொன்ன முதலிரவு கதை!.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!..

google news
Continue Reading

More in Cinema News

To Top