தெரிஞ்சா தோட்டத்தில் விழும் அடி.. குடிச்சதை எம்ஜிஆரிடம் இருந்து மறைக்க நாகேஷின் தில்லாலங்கடி ஐடியா!..
மக்கள் திலகம், புரட்சிக்கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகரும் மக்களின் பேராதரவை பெற்றவருமான எம்ஜிஆர். நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த எம்ஜிஆர் சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.
சினிமாவில் முடிசூடா மன்னனாக வசூல் சக்கரவர்த்தியாக விளங்கிய எம்ஜிஆர் தான் நடிக்கும் படங்களில் குடிப்பது, சூதாடுவது, பெண்களை மானபங்கம் படுத்துவது போன்ற காட்சிகளில் அவர் நடிக்க மாட்டார். மேலும் கோயிலில் சாமி பக்தி பற்றிய காட்சிகளிலும் அவர் நடித்தது இல்லை.
எம்ஜிஆர் ஆற்றிய நற்பண்புகள்
இப்படி தன்னால் யாரும் கெட கூடாது என்பதில் கவனமாக இருந்தார். மேலும் எந்த பழக்கமும் இல்லாதவரும் கூட.அதானலேயே மக்கள் திலகமாகவெ மின்னினார். மேலும் தவறு நடக்கும் இடத்தில் முதல் ஆளாக தட்டிக் கேட்பவரும் எம்ஜிஆர் தான்.
இதையும் படிங்க : உங்க இறப்பு கொண்டாடப்படுகிறது அப்பா… மகேஷ் பாபு தனது தந்தைக்கு எழுதிய கடிதம்… வைரலாகும் பின்னணி…
அது சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி. எந்த பிரச்சினை யாரால் நடந்தது என்று விசாரித்து தவறு இழைக்கிறவர்களை ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து விருந்து கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவரின் காலகட்டத்தில் அவருடனயே பயணம் செய்தவர்களில் நடிகர் நாகேஷும் குறிப்பிடத்தக்கவர்.
நாகேஷின் தீராத பழக்கம்
எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நாகேஷ் இல்லாத காட்சிகளை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அவரும் கொடிகட்டி பறந்தார். ஆனால் நாகேஷ் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர். குடி இல்லாமல் இருக்கவே மாட்டார் என்று காமெடி நடிகர் மதன் பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க : கெட்டப்பேர்தான் மிச்சம்.. மனுஷனா மாத்திய விஜயகாந்தின் படம்.. புலம்பும் பிரபல இயக்குனரின் வாரிசு!..
மேலும் அவர் கூறும்போது எம்ஜிஆருக்கு குடிப்பதும் பிடிக்காது, குடிக்கிறவர்களையும் பிடிக்காது. ஆனால் நாகேஷ் குடியில்லாமல் இருக்க மாட்டார். ஆகவே படப்பிடிப்பிற்கு போகும் முன்னரே புறப்படும் போதே குடித்துவிட்டு கிளம்பி விட்டாராம்.
நாகேஷின் தில்லுமுல்லு
எப்பொழுதும் எம்ஜிஆர் நாகேஷ் சந்திப்பில் இருவரும் கை குழுக்குவது வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். அதே போல் படப்பிடிப்பில் எம்ஜிஆரை பார்த்ததும் ஹலோ மிஸ்டர் எம்ஜி.ராமச்சந்திரன் என்று கை குழுக்கும் போது கை ஆடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கையை இருக்கமாக நேராக பிடித்துக் கொண்டு நீட்டுவாராம்.
இருந்தாலும் எம்ஜிஆர் கண்டுபிடித்துவிடுவார். சில நேரம் அறிவுரை வழங்குவார் என்று நாகேஷ் மதன்பாபுவிடம் தெரிவித்ததாக கூறினார். மதன் பாபுவும் நாகேஷும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றனராம்.