Ulagam Sutrum Valiban: எம்ஜிஆரின் நடிப்பில் மிகப்பெரிய வசூலை அடைந்து பெரும் சாதனையை பெற்ற படமாக உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அமைந்தது. ஆனால் இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து ரிலீஸ் ஆகும் வரை ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளானார் எம்ஜிஆர். பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் எம்ஜிஆரை துன்புறுத்தினார்கள். இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து போராடி படத்தை ரிலீஸ் செய்து யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றார் எம்ஜிஆர். இந்த நிலையில் உலகம் சுற்றம் வாலிபன் திரைப்படத்தில் நாகேஷை நடிக்க வைக்க தன் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர்.
இதையும் படிங்க: ரஜினியின் ஆசை… ஆடிப்போன பாலசந்தர்… கைக்கொடுத்த எம்.ஜி.ஆர்… அப்படி என்னங்க அது?
இந்த மாதிரி நாளை ஒரு படத்திற்காக ஜப்பான் செல்கிறோம். தயராக இரு என்று சொன்னாராம். நாகேஷும் சரி எனச் சொல்லிவிட்டு கதை என்ன என்று கேட்டாராம். ஆனால் எம்ஜிஆர் ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டாராம். மறு நாள் எம்ஜிஆர் வீட்டில் இருந்துதான் படக்குழு ஜப்பான் செல்வதற்காக ஒன்று கூடியிருந்தார்களாம்.
சரி . போகும் போதாவது கதையை சொல்வார் என்று நாகேஷ் எதிர்பார்த்தாராம். ஆனால் எம்ஜிஆர் சொல்லவில்லையாம். ஜப்பான் சென்றதும் உலகப் பொருள்காட்சியில் சூட்டிங்கிற்கு தயாரான எம்ஜிஆர் நாகேஷை அழைத்து என்ன சீன் என்று சொல்லியிருக்கிறார். அதாவது ஹீரோவை ஓடி ஒடி போய் தேடுவது போல சீன். போய் நடி என்று மட்டும் சொன்னாராம்.
இதையும் படிங்க: தற்கொலை பண்ணிக்க நினைச்ச ரஜினிகாந்த்… நண்பர் சொன்ன கதையால் சூப்பர்ஸ்டாராக மாறிய ஆச்சரியம்!
நாகேஷும் நடித்து விட்டு அருகில் இருந்தவரிடம் ‘உலக பொருள்காட்சியில் இங்க ஓடு அங்க ஓடுனு சொல்றாரே தவிர. கதைனு ஏதாவது வச்சிருக்காரா? இந்தப் படம் எங்க போய் முடியப் போதுனு தெரியல’ என்று சொல்லி புலம்பினாராம் நாகேஷ்.
ஒரு வழியாக படத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பியதும் படத்திற்கான எடிட் பணிகளை எல்லாம் முடித்த எம்ஜிஆர் நாகேஷை அழைத்து படத்தை பார்க்கச் சொல்லியிருக்கிறார். நாகேஷும் படத்தை பார்த்து அதிசயித்து விட்டாராம். படம் அற்புதமாக இருக்கிறது என மகிழ்ச்சி பொங்க கூறினாராம் நாகேஷ்.
இதையும் படிங்க: கொஞ்சம் விட்டா நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணிருவீங்க போல! ‘ரஜினி171’ பட திடீர் அறிவிப்புக்கான காரணம் இதோ
படம் எப்படி வரப் போகிறதோ? கதைனு ஏதாவது வச்சிருக்காரா? இப்படியே எடுத்துட்டே இருக்காரே எம்ஜிஆர் என்று புலம்பினீர்களே? இப்பொழுது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா நாகேஷ் என நாகேஷை பார்த்து எம்ஜிஆர் கேட்க அப்பொழுது நாம் சொன்ன தகவல் எம்ஜிஆரிடம் போய் சென்றடைந்திருக்கிறது என நாகேஷ் யோசித்தாராம்.
ஆனால் இதை பற்றி ஜப்பானிலேயே எம்ஜிஆர் கேட்டிருக்கலாம். அதுதான் செய்யவில்லை. அதற்கான பதிலை படத்தின் மூலம் சரியாக சொல்லியிருக்கிறார். அதுதான் எம்ஜிஆர் என இந்த தகவலை கூறிய சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…