ரெடின் கிங்ஸ்லி செய்த வேலையால் கடுப்பாகி படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய வடிவேலு....!

by Rohini |
red_vadivelu
X

இப்போது வேண்டுமானால் தமிழ் சினிமாவில் ஏராளமான காமெடி நடிகர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு சமயத்தில் குறிப்பிட்ட சில காமெடி நடிகர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் காமெடி கிங் வடிவேலு. இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் வடிவேலு உடன் இணைந்து சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்த்ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், ஷிவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வடிவேலு உடன் இவர்கள் அனைவரும் இணைந்திருப்பதால் நிச்சயம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

Naai_Sekar_Returns

அதேபோல் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தான் என கூறப்படுகிறது. அதாவது இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட இருந்ததாம். இதற்காக வடிவேலு மேக்கப் எல்லாம் போட்டு ரெடியாக இருந்துள்ளார். ஆனால் ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பு தளத்திற்கு வரவே இல்லையாம்.

naisekar

அவருக்காக கிட்டத்தட்ட 2 மணிநேரம் காத்திருந்த வடிவேலு, செம டென்சனாகி இறுதியில் படப்பிடிப்பையே கேன்சல் செய்துவிட்டு சென்றுவிட்டாராம். இதனால் வடிவேலு மட்டுமின்றி ஒட்டுமொத்த படக்குழுவும் ரெடின் கிங்ஸ்லி மீது அதிருப்தியில் உள்ளதாம். என்ன ரெடின் இது காமெடி கிங்கயே இப்படி கடுப்பாக்கிட்டீங்க?

Next Story