எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றிய நம்பியார்… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

mgr nambiyar
எம்ஜிஆர் நடித்த பல படங்களில் நம்பியார் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் நம்பியார் நடிப்பைப் பார்க்கும்போது அவ்வளவு கொடூரமாக இருக்கும். நமக்கு நம்பியார் மேல அவ்ளோ வெறுப்பு வரும். உருட்டும் விழிகள், கோணலாக வாயை வைத்துப் பேசும் டயலாக் என பல அம்சங்களுக்குச் சொந்தக்காரர் நம்பியார்.
எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல படங்களில் அசத்தலான வில்லனாக நடித்தவர் நம்பியார். இவரைப் பார்த்தால் சின்னக் குழந்தை பயந்து நடுங்கி அலறி விடும். அப்படி ஒரு மிரட்டலான நடிப்பைத் திரையில் தருவார்.
அவரைப் படத்தில் பார்க்கும்போதுதான் நமக்கு அவ்ளோ வெறுப்பு வரும். ஆனால் நிஜத்தில் பரம சாது. அவர் சிறந்த ஐயப்ப பக்தர். தன் வாழ்நாள் இறுதி வரை குருசாமியாக ஐயப்பன் கோவிலுக்குப் போவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை எம்ஜிஆரைப் படப்பிடிப்பில் உயிருக்குப் போராடும்போது நம்பியார் தான் காப்பாற்றினாராம். அது என்ன படம்னு பார்க்கலாமா…?
எம்ஜிஆர் கதாநாயகனாக அறிமுகமான படம் ராஜகுமாரி. ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அந்தப் படத்தில் நம்பியார் எம்ஜிஆரின் நண்பராக நடித்தார். ஒரு காட்சியில் எம்ஜிஆர் தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் இயற்கை அவரை சாகவிடாதபடி தூக்குமேடையின் பள்ளத்தில் எம்ஜிஆர் விழுந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் திட்டமிட்டபடி படத்தின் காட்சியை எடுத்துவிடலாம் என நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் எம்ஜிஆரின் கழுத்தை தூக்கு கயிறு சட்டென இறுக்கி விட்டது. எல்லாரும் திகைத்து நிற்க, நம்பியார் சட்டென்று போய் எம்ஜிஆரைத் தூக்குக் கயிற்றில் இருந்து விடுவித்துள்ளார். அப்படி உயிரைக் காப்பாற்றியவர் தான் நம்பியார். அந்த வகையில் எம்ஜிஆர் உடனான அவரது நட்பு ஆழமானதுதான்.
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் 1947ல் வெளியான படம் ராஜகுமாரி. மு.கருணாநிதி வசனம் எழுதியுள்ளார். எம்ஜிஆர், டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, தவமணி தேவி, சிவபாக்கியம், நம்பியார், சி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்துள்ளார்.