Actress Namitha: நாம் பேசும் தமிழ் மொழியே மிகவும் அழகானது. அதுவும் நமீதா பேசி கேட்கும் போது இன்னும் அழகாகவே மாறியது. அந்தளவுக்கு கொஞ்சும் தமிழில் பேசும் நமீதாவின் தமிழ் கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கும். தமிழ் நாட்டு ரசிகர்களை நமீதா எப்போதும் ஹாய் மச்சான்ஸ் என்றே செல்லமாக அழைப்பார். இவரை தவிற வேறு எந்த பிரபலமும் அப்படி அழைத்ததே இல்லை.
நமீதாவிற்கே உரிய ஒரு ஸ்டைலாகவே அது மாறியது. எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நமீதா அழகிய தமிழ் மகன், பில்லா, ஏய் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் அபிமானங்களை பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு நமீதா உடல் எடை அதிகமாகி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நிவேதா பெத்துராஜ் விவகாரம்.. இப்போ எங்க போச்சு நடிகர் சங்கம்? பொங்கி எழும் பிரபலம்
அந்த நேரத்தில்தான் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை பிரபலமாக்கினார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட நமீதா வெறும் 28 நாள்கள் இருந்து அதன் பிறகு வெளியே வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது பட வாய்ப்புகள் வந்ததா என்றால் இல்லை. பிறகு ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் குடும்பம் குழந்தை என கவனித்து வந்த நமீதா அரசியலிலும் இறங்கினார். தற்போது அரசியலில் ஒரு முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார் நமீதா. ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராக இப்போது நமீதாவும் இணைந்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஸ்ருதியால் பல்ப் வாங்கிய விஜயா.. மனோஜுக்கும், ரோகினிக்கும் இந்த திருட்டு புத்தி போகாதா?
ஏற்கனவே சினேகா , சங்கீதா மற்றும் பாபா மாஸ்டர் இருந்த நிலையில் பாபா மாஸ்டருக்கு பதிலாக இப்போது நமீதா நடுவராக வந்து சேர்ந்திருக்கிறார். அதுவும் புதுப் பொலிவுடன் மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார் நமீதா.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…