சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் கேரக்டரில் நடிக்க இருந்தது முன்னணி பிரபலம்தான்… ஆனா?
Subramaniyapuram: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சூப்பர்ஹிட் சுப்ரமணியபுரம் படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலங்கள் குறித்து சசிகுமார் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது.
சசிகுமார் எழுதி இயக்கிய திரைப்படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் ஜெய், ஸ்வாதி, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து செய்துள்ளார். 85 நாட்களில் உருவாக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
இதையும் படிங்க: கோவா டிரிப் பாடகியிடம் மடங்கிய ஜெயம் ரவி… இதனால்தான் ஆர்த்தி ரவியிடம் விவாகரத்தா?
பழைய 80களில் இருந்த மதுரையை அப்பட்டமாக காட்ட பேனர், போட்டோ என அனைத்தையும் சேகரித்து அந்த காலக்கட்டத்தை எங்குமே பிசிறு தட்டாமல் திரைக்கதையை உருவாக்கி இருந்தார். இப்படத்தில் ஜெய் மற்றும் சசிகுமார் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இதில் ஜெய் வேடத்தில் முதலில் நடிக்க சாந்தனு பாக்கியராஜை தான் சசிகுமார் அணுகி இருக்கிறார்.
இதுகுறித்து சசிகுமார், இயக்குனர் பாக்கியராஜை சந்தித்து கதை விவாதம் நடத்தி இருக்கிறார். ஆனால் அவர் தன் மகனின் முதல் படம் சக்கரக்கட்டியாக தான் இருக்கவேண்டும் என்ற முடிவில் இருந்தாராம். ஏனெனில், முன்னணி தயாரிப்பாளர் எஸ்.தாணு மற்றும் மியூசிக் டைக்ரக்டர் ஏ.ஆர்.ரஹ்மானின் கூட்டணி என்பதால் பாக்கியராஜ் சுப்ரமணியபுரத்துக்கு நோ சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…
அதை தொடர்ந்தே அந்த கேரக்டரில் ஜெய் நடித்திருக்கிறார். அதுபோலவே, சாந்தனுக்கு முன்னர் நந்தாவிடம் கேட்டு இருக்கிறார். மெளனம் பேசியதே படத்தில் நடித்த நந்தாவிடம் அமீரின் உதவி இயக்குனர் கதை சொல்ல வேண்டும் எனக் கேட்டு இருக்கின்றனர். ஆனால் நந்தா அதை மறந்துவிட்டாராம். தொடர்ந்து வேறு படங்களில் பிஸியாகி விட்டார்.
மேலும், சசிகுமார் பாண்டியராஜன் மகன் சாந்தனு மற்றும் பாக்கியராஜ் மகன் பிரித்விராஜை வைத்து இப்படத்தை முடிக்க முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அவர்கள் வேண்டாம் என்பது ஜெய் உள்ளே வந்திருக்கிறார். யாரிடமும் முதலில் சொல்லாமல் இருந்தாராம். ஜெய் கேரக்டரில் காதல் காட்சி இருக்கும் என்பதால் அதை அவரிடம் கொடுத்துவிட்டு பரமன் கேரக்டரில் சசிகுமார் நடித்து இருக்கிறார்.