தளபதி 66 பட வில்லனாக பிரபல ஹீரோ? - அவர் வந்தா ரணகளம்தான்!...
மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. அங்கு படப்பிடிப்பு முடிந்து படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு பின் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்கவுள்ளார்.
இதையும் படிங்க: அன்றே கணித்தார் சூர்யா!.. போதை மருந்து கடத்திய ‘சிங்கம் 2’ பட நடிகர் கைது…..
மேலும், தோழா படத்தை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்கவுள்ளார். இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இவர் நான் ஈ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.