ரஜினி கூட அந்த காட்சிலயா?..துணிஞ்சு நடிச்சது யாருனு தெரியுமா?..
தமிழ் சினிமாவின் உன்னதமான நட்சத்திரமாக இருப்பவர் நடிகரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.
இளம் தலைமுறை நடிகர்களுக்கே ஒரு வழிகாட்டியாக இருந்து வரும் ரஜினிகாந்த் அவரது படங்கள் தான் இப்ப உள்ள நடிகர்களுக்கு ஒரு துருப்பு சீட்டாக விளங்குகின்றது.அந்த அளவுக்கு அனுபவமிக்க கலைஞராக இருக்கிறார் ரஜினிகாந்த்.
இதையும் படிங்கள் : தூத்துக்குடியில் தமிழாசிரியர்… கவிஞரின் காதல் வரிகளில் இதயத்தை பறிகொடுத்து முத்தமிட்ட எம்ஜிஆர்…!
இவரது நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை நடிகர் நாசர் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். நாசர் ரஜினிக்கும் கமலுக்கும் நெருங்கிய நண்பர் என அனைவருக்குமே தெரிந்த ஒன்று. சந்திரமுகி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருப்பார்.
அந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினியை வாசலில் இருந்து நாசர் வெளியே தள்ளுவது போன்ற காட்சி இருக்கும். அதை நடிகர் பிரபு தான் முதலில் பண்ண வேண்டியிருந்ததாம்.ஆனால் இயக்குனர் வாசுவிடம் பிரபு என்ன வாசு இதை நான் செய்யலாமா? என்னால கண்டிப்பா முடியாது. ரஜினியை நான் புடிச்சு தள்ளுவதா? என விலகிவிட்டாராம். அதன் பிறகு விஜயகுமாரிடம் கூற அவரும் கண்டிப்பா இதை என்னால செய்யவே முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு வாசு நாசரை திரும்பி பார்க்க நாசர் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் பண்ணுகிறேன் என்று அந்த காட்சியில் நடித்தாராம் நாசர்.