‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகர்! வாய்ப்புகள் கிடைக்காததால் எப்படி ஆயிட்டார் பாருங்க..

by Rohini |
kaja
X

kaja

Nadhaswaram Seria: கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல் நாதஸ்வரம். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சீரியல் 1356 எபிசோடுகளுடன் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பொதுவாக திருமுருகன் இயக்கத்தில் வெளியாகும் எந்த சீரியல் நாளும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும்.

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் மெட்டிஒலி. அதுவும் பெரிய அளவில் வெற்றி பெற்ற சீரியலாகும். அதனைத் தொடர்ந்து மெட்டி ஒலி சீரியலுக்கு இணையான ஒரு புகழைப் பெற்ற தொடர் தான் இந்த நாதஸ்வரம் சீரியல். இந்த நாதஸ்வரம் சீரியலில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே மக்கள் மனதில் என்றுமே மறக்காத கதாபாத்திரமாக அமைந்தது.

இதையும் படிங்க: முரளி அந்த விஷயத்துல ரொம்பவே வீக்காம்… பிரபல இயக்குனர் என்னா சொல்றாருன்னு தெரியுமா?

இப்போது வரைக்கும் அந்த சீரியலில் நடித்த கலைஞர்களை மக்கள் பார்க்கும் போதும் அவர்களுக்குள் ஒரு தனி உற்சாகம் பிறந்து விடுகிறது. அந்த வகையில் நாதஸ்வரம் சீரியலில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு கதாபாத்திரம் என்றால் அது காஜா கதாபாத்திரம் தான். அதில் திருமுருகனுக்கு துணையாகவே இந்த காஜா கதாபாத்திரம் சீரியல் முழுக்க பயணமாகும்.

குள்ளமான உயரத்துடன் அண்ணே அண்ணே என்று திருமுருகன் பின்னாடியே சுற்றும் ஒரு கதாபாத்திரம் தான் இந்த காஜா கதாபாத்திரம். இவரைப் பற்றிய ஒரு செய்தி தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாதஸ்வரம் சீரியலுக்குப் பிறகு காஜாவை வேறு எந்த சீரியலிலும் நம்மால் பார்க்க முடியவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பற்றியும் எந்த பத்திரிக்கைகளிலும் பார்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: புதுசா யோசிக்கவே தெரியாதா? இன்னும் அரைச்ச மாவையே அரைச்சி தலைப்பு வைக்கும் இயக்குனர்கள்!

இந்த நிலையில் தான் திருமுருகனைத் தவிர தனக்கு வேறு யாரையும் தெரியாது என்று காஜா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அது மட்டுமல்லாமல் சரி வர வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் இப்போது ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருவதாகவும் அது சம்பந்தமான புகைப்படங்கள்தான் இப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன.

Next Story