More
Categories: Cinema News latest news

வாங்கிய ஒரு விருதுக்கும் சண்டையா?.. அல்லு அர்ஜூனுக்கு போட்டியாக நிற்கும் நடிகர்

இந்திய சினிமா துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகளை கொடுத்து கௌரவித்து வருகிறது. இந்த விருதுகள் திரைப்படத் தயாரிப்புத் துறையில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்து கலைஞர்களையும் அவர்கள் சார்ந்த ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வருட விருதால் ஒரு சில பேருக்கு அதிர்ப்தியும் ஒரு சில பேருக்கு ஆச்சரியத்தையும் தந்திருக்கிறது. தமிழில் கடைசி விவசாயி என்ற திரைப்படத்திற்காக சிறந்த திரைப்படம் என்ற விருதை கொடுத்து பெருமை படுத்தியது.

Advertising
Advertising

இதையும் படிங்க : இளையராஜாவுடன் பணிபுரிந்த ‘எதிர்நீச்சல்’ பிரபலம்! வெளிவந்த தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்

அதே வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம் மற்றும் கர்ணன் போன்ற படங்களுக்கு விருது வழங்கப்பட வில்லை. முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் புஷ்பா படத்திற்காக தேசிய விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சந்தன மரக் கடத்தை அடிப்படையாக கொண்ட அந்தப் படத்திற்கு எதுக்குயா இந்த தேசிய விருது என அனைவரும் அதிர்ப்தி அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தில் கதா நாயகனாக நடித்த அல்லு அர்ஜூனனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெலுங்கு சினிமா உலகில் தேசிய விருது வாங்கிய முதல் தெலுங்கு நடிகர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார் அல்லு அர்ஜூன். இதை தெலுங்கு தேசமே கொண்டாடி வருகிறார்கள். ஆனால் ஒரு நடிகர் மட்டும் வருத்தத்தில் இருக்கிறாராம்.

இதையும் படிங்க :வடிவேலுயை நம்பி களமிறங்கும் சந்திரமுகி 2… மியூசிக்கில் கூட சொதப்பினாரா கீரவாணி… என்னங்க இப்படி!

நடிகர் மகேஷ் பாபு. ஏனெனில் முதலில் புஷ்பா படத்தின் கதையை இயக்குனர் மகேஷ்பாபுவுக்கு தான் கூறினாராம். அவரும் நடிக்கிறேன் என்று சொல்ல படத்தின் இயக்குனர் சுகுமாருக்கும் மகேஷ்பாபுவுக்கு இடையே சில பல பிரச்சினைகள் மோதல்கள் எழுந்ததாம். அதனால்  மகேஷ்பாபு இந்தப் படத்தை விட்டு விலகினாராம். அவருக்கு பின் இந்த வாய்ப்பு அல்லு அர்ஜூனுக்கு போயிருக்கிறது. இப்போது கடும் அப்செட்டில் இருக்கிறாராம் மகேஷ்பாபு. நல்ல வாய்ப்பை தவறவிட்டோமே என்று.

Published by
Rohini

Recent Posts