மற்ற சினிமாக்களை விட இந்திய சினிமாவில் இசை மற்றும் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் வெளிநாட்டு படங்களில் அவற்றின் பின்னணி இசைக்காக மட்டுமே இசையமைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை திரைப்படங்களில் பாடல்கள் இடம் பெறுவதால் அவர்களுக்கு திரைப்படத்தில் முக்கியமான இடம் இருக்கிறது.தமிழில் இப்போதைய தலைமுறைக்கு ட்ரெண்டிங்கில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் சீன் ரோல்டன். தமிழில் இவர் இசையமைத்த பல பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளன. மெஹந்தி சர்க்கஸ், ஜெய் பீம் படத்தில் வரும் பாடல்கள், ஒரு நாள் கூத்து போன்ற பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
விருது வாங்கிய இயக்குனர்:
ஆனால் பெரும்பாலும் சினிமா ரசிகர்கள் மத்தியில் சீன் ரோல்டன் பெரிதாக அறியப்படாத இசையமைப்பாளராக இருக்கிறார். இவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை கூறியிருந்தார். 2016 இல் வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்திற்கு சீன் ரோல்டன்தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ராஜ் முருகன் இயக்கியிருந்தார்.
ஜோக்கர் திரைப்படத்தில் அப்போதுதான் சுந்தரயர் என்கிற பாடகர் அறிமுகம் ஆகியிருந்தார். அவர் அந்த படத்தில் ஜாஸ்மின் என்கிற ஒரு பாடலையும் பாடி இருந்தார். ஜோக்கர் திரைப்படம் தேசிய விருது பெற்ற பொழுது அந்தப் பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது. முதல் பாடலிலேயே அவர் தேசிய விருது வாங்கிய பொழுதும் அதே பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என சீன் ரோல்டன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்னை யூஸ் பண்ணிக்கிறாங்க… கஷ்டமா இருக்கு.. ஃபீல் பண்ணும் அனந்த் வைத்தியநாதன்
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…
சென்னை வானகரத்தில்…