சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. பிரம்மாண்டமாக வெளியிட்டு விழா நடைபெறுகிறது. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் சிம்பு படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
மேலும், கௌதம் வாசுதேவ் மேனன் – சிம்பு கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆதலால், வசூல் அள்ளிவிடலாம் என்று படகுழு நினைத்திருந்தது.
இதையும் படியுங்களேன் – முதல் படத்தில் ஆஹா ஓஹோ ஹிட்.! அடுத்தடுத்து காணாமல் போன இளம் சிட்டுகள்… நஸ்ரியா முதல் ஸ்ரீதிவ்யா வரை…
ஆனால், அவர்களுக்கு ஷாக்கிங் தரும் ஒரு செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி வெந்து தணிந்தது காடு ரிலீஸ் ஆன மறுநாள், இந்தியா முழுக்க தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள நான்காயிரம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அனைத்திலும் டிக்கெட் விலை 75 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன் – நயன்தாரா, சமந்தாவின் ஒரு நாள் மேக்கப் செலவு தெரியுமா..? மிரண்டு போன தயாரிப்பாளர்கள்.!
இந்த ஒரு நாள் விலை குறைப்பதற்கு கிட்டத்தட்ட அனைவரும் ஆதரவு தெரிவித்துவிட்டனாராம். ஆதலால், அன்றைய தினம் படத்தின் வசூல் முதல் நாளை விட பாதியாக குறையும் என சிம்பு படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் மற்ற சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
சொர்க்கவாசல் திரைப்படம்…
Lucky Bhaskar:…
தனது வருங்கால…
Rajinikanth: தமிழ்…