செஞ்சா குற்றம்… நடிச்சா தேசிய விருது… தெலுங்கு தேசம் வாங்குன ஒரு விருதுக்கே இத்தனை சர்ச்சையா?

by Akhilan |
செஞ்சா குற்றம்… நடிச்சா தேசிய விருது… தெலுங்கு தேசம் வாங்குன ஒரு விருதுக்கே இத்தனை சர்ச்சையா?
X

இந்திய படங்களுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சிலர் ஆதரவை தெரிவித்து இருந்தாலும், பலருக்கு அறிவிக்கப்பட்ட விருதுகள் குறித்து அதிருப்தி நிலவி வருகிறது. அதிலும் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்ற அல்லு அர்ஜூன் தற்போது இணையத்தில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

அதிலும், போட்டியில் இருந்த கர்ணன், ஜெய்பீம், சார்பாட்டா நாயகர்களாக இருந்த யாருக்கும் கிடைக்காமல் புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கர்ணன், ஜெய்பீம் படங்கள் எல்லாம் சாதி ரீதியாக பிரச்னையை கிளம்பியது. அதனால் இரு படங்களுக்குமே சமரீதியான விமர்சனங்களையே பெற்றது. அதிலும் ஜெய்பீம் படத்தில் இருந்த சிலகாட்சிகள் குறிப்பிட்ட சாதியை பற்றி பேசியதாகவே பலரும் விமர்சித்தனர்.

இதையும் படிங்க : எல்லாம் ஓகே! ரெண்டு மாசம்தான் – அடிச்சு தூள் கிளப்பப் போறாரு! ‘விடாமுயற்சி’க்கு கிடைத்த வெற்றி

சரி இது தான் சாதிரீதியான படங்கள் சார்பாட்ட பரம்பரை படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய ஆர்யாவிற்காவது விருது கொடுத்திருக்கலாம். குத்துசண்டையில் வேறொரு அத்தியாயமாகவே இப்படம் இருந்ததாகவே பலரும் பாராட்டினர். ஒருவேளை இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது இப்படத்தின் நெகடிவ்வாக பார்க்கப்படுவதாகஒரு சிலர் தெரிவித்தனர்.

இந்த படங்களில் நடித்த நாயகர்களுக்கு கொடுக்காமல் சந்தன மரத்தினை வெட்டி விற்பனை செய்யும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புஷ்பா படத்திற்கு கொடுக்கப்பட்டது பெரும் பிரச்னையாகவே பலரும் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க : எதுக்குப்பா மெடிக்கல் டெஸ்ட்லாம் எடுக்குறீங்க? விஜயை வச்சு செய்யும் வெங்கட் பிரபு – ரகசிய பயணத்தில் ‘தளபதி 68’

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சமூக பிரச்னையாக பார்க்கப்படும் சந்தன மர கடத்தல் செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட ஒரு கதைக்கு தேசிய விருது கொடுக்கலாமா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழில் பல பிரபலங்களாக தனுஷ், சூர்யா, பாபிசிம்ஹா கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வாங்கி விட்டனர். ஆனால், பெரிய புகழை பெற்ற என்.டி.ராமாராவுக்கு கிடைக்காத தேசிய விருது தெலுங்கில் முதல்முறையாக அல்லு அர்ஜூனுக்கு கொடுத்தது பெருமையான விஷயமாக இருந்தாலும் புஷ்பா பட கதைதான் தற்போது பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

Next Story