பரபரப்பாகும் லேடி சூப்பர்ஸ்டார்… கணவரின் ஆர்டர் தான் காரணமா? பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

by Akhilan |
பரபரப்பாகும் லேடி சூப்பர்ஸ்டார்… கணவரின் ஆர்டர் தான் காரணமா? பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!
X

Nayanthara: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில் பிசினஸில் பிஸியாக இருந்தவர். ஒருவழியாக மீண்டும் தன்னுடைய சினிமா கேரியர் பக்கம் திரும்பி இருக்கிறார்.

கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன் தாரா. அவரின் திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் ரொம்பவே சிம்பிளான முறையில் நடந்தது. அதை தொடர்ந்து சில மாதத்திலேயே இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாய் முறையில் பெற்றுக் கொண்டார்.

இதை தொடர்ந்து தன்னுடைய கணவருக்கு அஜித்தினை இயக்கும் பட வாய்ப்பு பறிபோனது. அதுவே அவருக்கு பெரிய அடியாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் இருக்கிறது. மேலும், குழந்தையும் பெற்று விட்ட நயனை முன்னணி நடிகர்கள் யாரும் புக் செய்ய முன்வரவில்லை.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழின் இந்த வார எலிமினேஷன் இவரா? வட போச்சா? கடுப்பான ரசிகர்கள்..!

இதனால் மார்க்கெட்டில் கீழ் இருந்த த்ரிஷா திடீரென உச்சம் அடைந்தார். நயன் தன்னுடைய சினிமா கேரியருக்கு சில காலம் ப்ரேக் கொடுத்து விட்டு அழகுசாதன கம்பெனி ஒன்றை 9 ஸ்கீன் என்ற பெயரில் உருவாக்கினார். இதை தொடர்ந்து நாப்கின் பிசினஸையும் அறிமுகப்படுத்தினார்.

இது அவரின் கோலிவுட் மார்க்கெட்டை மேலும் அடிவாங்க வைத்தது. கணவர் விக்னேஷ் சிவன் பிசினஸை எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன். நீ நடிப்பில் கவனம் செலுத்து என அறிவுரை வழங்கி இருக்கிறார். இதனால் நயன் மீண்டும் நடிப்பில் மும்முரம் காட்ட தொடங்கி இருக்கிறார்.

இன்று அவர் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். விக்னேஷ் சிவனும் தன்னுடைய பசங்களுடன் நயன் இருக்கும் புகைப்படத்தினை ரிலீஸ் செய்து சிம்பிளாக வாழ்த்தினை சொல்லி இருந்தார்.

இதையும் படிங்க: தனுஷின் மகன் சிக்கியது இப்படித்தான்!. இது எப்போது நடந்தது தெரியுமா?…

Next Story