அந்த விஷயத்துக்கு விஜய்க்கு ஓகே சொன்ன நயன்… ஷாருக்கானுக்கு நோ சொன்ன பின்னணி…
Nayanthara: நடிகை நயன்தாராவிடம் எப்போதுமே ஒரு வித கட்டுப்பாடு இருக்கும். ஒரே விஷயத்தினை சிலருக்கு ஓகே சொல்லுவார். ஆனால் இன்னொருவருக்கு நோ சொல்லிவிடுவார். அப்படிப்பட்ட விஷயம் குறித்த ஆச்சரிய தகவல்கள்.
தமிழ் சினிமாவில் நடிகைகள் ஒரு படத்தின் முதன்மை கதாபாத்திரமாக நடித்தாலும் படம் வெற்றி பெறும் என்ற லாஜிக்கை உருவாக்கியவர் நயன்தாரா. தனி நாயகியாக நிறைய படங்களில் நடித்து ஹிட்டடித்தார். லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்றார்.
இதையும் படிங்க: கூலி டீசர் வீடியோவில் லோகேஷ் செஞ்ச வேலைய கவனிச்சீங்களா?!.. அட இது தெரியாம போச்சே!…
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். முதல் படமே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட காதல் நயன்தாராவின் திரை வாழ்க்கையை பெரிதாக பாதித்தது. இதனால் பிரேக் எடுத்துக்கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் தன்னுடைய கேமை தொடங்கினார் நயன்தாரா.
தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் முதல் நடிகையாக வலம் வந்தவருக்கு சமீபத்திய காலமாக இறக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக நடித்த எல்லா படங்களுமே மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. இதனால் நடிப்பை விட பிசினஸ் செல்லும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையும் படிங்க:ராதிகா கர்ப்பத்தால் மனம் உடைந்து போன பாக்கியா… இருக்கும் தானே!… ஆனா?
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் தான் நயன்தாரா ஹிட் பட லிஸ்டில் இருக்கிறது. ஆனால் நயன் முதலில் ஷாருக்கானுக்கே நோ சொன்ன ஒரு சம்பவமும் நடந்திருக்கிறதாம். சிவகாசி படத்தில் விஜயுடனும், எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுடனும், சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஒற்றை பாடலுக்கு ஆடியவர் நயன்தாரா.
அதே நேரத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பிரியாமணி ஆடிய ஒன் டூ த்ரீ பாடலுக்கு முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நயன்தாராவிடம் தான். ஆனால் பாலிவுட்டில் தான் ஒற்றைப் பாடலில் அறிமுகம் ஆகக்கூடாது என்பதற்காக அதை மறுத்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: கார்த்திக் படத்தில் நானா? தயாரிப்பாளரை கண்டபடி திட்டிய மம்மூட்டி.. என்ன கேரக்டர் தெரியுமா?