25 கோடி ரூபாய் போச்சா? ஓன்னுமில்லாத திருமணத்திற்கா இவ்ளோ அக்கப்போரு! லேடி சூப்பர்ஸ்டாருக்கு இந்த நிலைமையா?
Lady Super Star: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்த நயனுக்கு பில்லா படம் ஒரு மாஸை உருவாக்கி தந்தது.
பில்லாவுக்கு முன்பு ஒரு சில படங்களில் தன் கவர்ச்சியை காட்டி வந்த நயன் பில்லா படத்திற்கு பிறகு தான் ஆக்ஷன் ஹீரோயினாக மக்களிடையே அறியப்பட்டார்.பெண்களை மையப்படுத்தி அமையும் படங்களிலும் நடித்து மக்கள் மனதில் அதிக வரவேற்பை பெற்றார்.
இதையும் படிங்க: ஃபிளாப்புக்கு காரணமே ஜெயம் ரவிதான்!. புலம்பும் இறைவன் பட தயாரிப்பாளர்!. இதுல இத்தன கோடி எக்ஸ்ட்ரா!..
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன் தனது திருமணத்தை மிகவும் கோலாகலமாக நடத்தினார். சென்னை மகாபலிபுரத்தில் நடந்த அவர்களது திருமணத்திற்கு குறிப்பிட்ட சில விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தனது திருமண நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்ய நெட்ஃபிளிக்ஸிற்கு 25 கோடிக்கு விற்றார் நயன்தாரா. இரண்டு வருடங்களை கடந்தும் இன்னும் நயன் விக்கி திருமண நிகழ்வுகளை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பாமல் வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: படத்தின் தலைப்பை கேட்டு அசந்துபோய் பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர்.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!..
காரணம் கேட்டால் அவர்களின் திருமணத்தில் சுவாரஸ்யமாக நடந்த எந்தவொரு நிகழ்வும் இல்லையாம். அதனால் இதை வெளியிட்டு அதனால் அந்த நிறுவனத்தின் பின்னடைவுக்கு அது காரணமாக அமைந்து விடக்கூடாது என்றும் எண்ணுகிறார்களாம்.
அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் நெட்ஃபிளிக்ஸில் நயன் திருமணத்தை ஒளிப்பரப்பு செய்யப் போகிறார்கள் என்று தெரிந்ததும் ரசிகர்கள் பலர் குறிப்பிட்ட தொகையை கட்டி சந்தாதாரர்களாகவும் மாறியுள்ளனர். ஆனால் இப்போது நயன் திருமணத்தை ஒளிப்பரப்பு செய்யலாமா வேண்டாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறதாம் நெட்ஃபிளிக்ஸ்.
இதையும் படிங்க: டிரெண்டிங்காகும் தலைவர்! அடுத்தடுத்த அப்டேட்களை தெறிக்க விடும் லைக்கா – ‘ரஜினி170’ல் இணையும் ஆக்ஷன் ஹீரோயின்