என்னங்க நடிக்கிறத விட்டுட்டு இப்படி இறங்கிட்டீங்க.. அபர்ணா பாலமுரளிக்கு இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட நயன்..!

by Akhilan |
என்னங்க நடிக்கிறத விட்டுட்டு இப்படி இறங்கிட்டீங்க.. அபர்ணா பாலமுரளிக்கு இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட நயன்..!
X

Aparna Balamurali: மலையாளத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. ஆனால் அவருக்கு ஒரு அடையாளத்தினை கொடுத்தது தமிழில் எட்டுத் தோட்டாக்கள் திரைப்படம். தற்போது அவரின் அடுத்த அவதாரத்தினை பார்த்து ஆச்சரியமாகி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

எட்டுத் தோட்டாக்கள் படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அபர்ணாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அவர் மீண்டும் மலையாள கரையோரம் சென்றார். பின்னர் ஜிவி நடிப்பில் வெளியான சர்வம் தாள மயம் படத்தில் நடித்தார். அது பெரிய அளவில் ரீச் கொடுக்கவில்லை.

இதையும் படிங்க:ஆர்வத்துல போஸ்ட் பண்ணிட்டேன்! அங்க இருக்கிறவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித் குறித்து ஆரவ் சொன்ன தகவல்

இங்கு தான் ஒரு ட்விஸ்ட் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் பொம்மி கேரக்டரில் நடித்தார். ஒரே படத்தில் ஓஹோ புகழ் எனச் சொல்லும் அளவுக்கு பலரும் அவரை பாராட்டி தள்ளினர். ஆஸ்கார் நாமினேஷன் பட்டியல் வரை சென்று திரும்பினார். ஆனால் மீண்டும் அவரால் தமிழில் ஜொலிக்க முடியவில்லை.

நித்தம் ஒரு வானம், வீட்டுல விஷேசம் என பட்ஜெட் படங்களே வாய்ப்பு கிடைத்தது. தற்போது தனுஷின் 50வது படத்தில் நடித்து வருகிறார். நடிச்சிட்டே இருந்தா சம்பாதிக்க முடியாது என நினைத்தவர். தற்போது ஒரு ட்ரஸ் கம்பெனியை துவக்கி இருக்கிறார். ஹைப்ஸ்வே என்ற பெண்களுக்கான ட்ரெஸ் வெப்சைட்.

இதையும் படிங்க:தெறிக்க!.. கொலை மாஸ் லுக்கில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்!. நம்ம தல எடுத்த போட்டோ பாருங்க!..

தற்போது இந்த வெப்சைட் வைரலாக நயனும் ஒரு காரணம். பெரும்பாலும் தனக்காக மட்டுமே போஸ்ட் போடுவதை வழக்கமாக வைத்து இருப்பவர். முதல்முறையாக பட ப்ரோமோஷன் இல்லாத ஒரு போஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு அபர்ணா பாலமுரளியும் நன்றி தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story