Nayanthara: இதுக்கு மேலயும் தனுஷ் அமைதியா இருப்பாரா? அடுத்த அடி எடுத்து வைத்த நயன்தாரா

Published on: November 17, 2024
dhanush 1
---Advertisement---

தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு இடையே நடக்கும் பிரச்சினை இப்போது அடுத்த லெவலுக்கு முன்னேறியிருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்க அதை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரும் லீடு ரோலில் நடித்திருந்தனர். பக்கா காமெடி கலந்த காதல் திரைப்படமாக நானும் ரவுடிதான் அமைந்தது.

காதல் மலர்ந்தது: கூடவே நயன் மற்றும் விக்கியின் காதலும் மலர்ந்தது. இந்த காதலால் விக்கி படத்தில் கவனம் செலுத்த தவறியதால் 4 கோடி பட்ஜெட்டில் உருவாக வேண்டிய படம் 17.5 கோடி அளவு உயர்ந்தது. இதனால் தனுஷ் கொஞ்சம் கோபத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நாளை நயனின் ஒரு டாக்குமெண்டரி படம் நெட்ஃபிளிக்ஸில் நாளை வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: புஷ்பானா பேரு இல்ல!… புஷ்பானா பிராண்டு!… செம மாஸா தெறிக்கவிட்ட புஷ்பா 2 டிரைலர்!…

ஆனால் இந்த டாக்குமெண்ட்ரியின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. அந்த டீஸரில் நானும் ரவுடிதான் படத்தின் 3 வினாடி காட்சிகளும் பாடலும் தன் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் 10 கோடி நஷ்டம் கேட்டதாக கூறப்பட்டது. இதை அறிந்த நயன் பயங்கர அதிருப்திக்குள் ஆளாகியிருக்கிறார்.

10 கோடி நஷ்ட ஈடு: ஏனெனில் கடந்த இரண்டு வருடமாக அந்த காட்சிகளை பயன்படுத்துவதற்கு தனுஷிடன் என்.ஓ.சி கேட்டிருக்கிறார் நயன். ஆனால் தனுஷ் கொடுக்கவில்லையாம்.சரி டிரெய்லரில் பயன்படுத்துவோம் என அந்தப் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்குத்தான் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டார். இப்படி இந்த பிரச்சினை அமைதியாகவே போய்க் கொண்டிருக்க திடீரென பொங்கி எழுந்தார் நயன்.

இதையும் படிங்க: நேத்து வந்தவர்களுடன் ஆட்டம் போடும் ரஜினி.. அட்லீனா மட்டும் ஏன் ஓடி ஒதுங்குறாரு தெரியுமா?

பெரிய அளவு அறிக்கையை தனுஷுக்கு எதிராக பதிவிட்டு ஒட்டுமொத்த மீடியாவையும் அவர் பக்கம் இழுத்துக் கொண்டார். ஆனால் இவ்ளோ பிரச்சினை நடந்தாலும் இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இதுவரை அமைதியாகவே இருக்கிறார். இந்த நிலையில் நாளை ரிலீஸாகும் அந்த டாக்குமெண்ட்ரியில் நானும் ரவுடிதான் படத்தின் அந்த 3 வினாடி காட்சியும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்று அந்த டாக்குமெண்ட்ரியின் ப்ரிவியூவ் ஷோவை பார்த்த சிலர் கூறியிருக்கிறார்கள்.டிரெய்லரில் பயன்படுத்தியதற்காக 10 கோடி கேட்ட தனுஷ் டாக்குமெண்டிரியில் பயன்படுத்தியதற்கு என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.