உயிருக்கும் உலகத்துக்கும் நயன்தாரா என்னம்மா சோறு ஊட்டுறாரு.. களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்!..
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்கள் சற்று முன் வெளியாகி இந்தியளவில் ஹாஷ்டேக்கில் வைரலாகி வருகிறது.
சிம்புவை உயிருக்கு உயிராக காதலித்து வந்த நடிகை நயன்தாரா வல்லவன் படத்தில் லிப் கிஸ், படுக்கையறை காட்சிகளில் எல்லாம் தாராளமாக கில்மா காட்டி நடித்து வந்தார். ஆனால், அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிம்புவை நயன்தாரா பிரிந்து சென்றார்.
இதையும் படிங்க: ஐடி விங்கை பலப்படுத்தும் விஜய்.. ஜவான் ஆடியோ லாஞ்சில் கண்டிப்பா சர்ப்ரைஸ் இருக்கு!..
அதன் பின்னர் வில்லு படத்தின் ஷூட்டிங்கின் போது பிரபுதேவாவை உலகமாக நினைத்து திருமணம் செய்துக் கொள்ளவே சென்ற நயன்தாராவுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி வைத்த செக் காரணமாக நடைபெறவிருந்த ரகசிய திருமணம் கடைசி நேரத்தில் நின்று போனது.
அதன் பின்னர், நடிகை நயன்தாரா விஜய்சேதுபதியுடன் நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். சுமார் 6 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படம் முடிந்த உடனே அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், சூர்யா, விஜய்சேதுபதி என ஒட்டுமொத்த திரைத்துறை முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டார்.
இதையும் படிங்க: அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் முதல் ஆப்பு ரெடி!.. லியோ டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம் தெரியுமா?..
திருமணமான 4 மாதங்களில் திடீரென ட்வின்ஸ் ஆண் குழந்தைகள் பிறந்து விட்டது என விக்னேஷ் சிவன் அதிரடியாக போட்டோ போட்டதும் ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், வாடகைத்தாய் மூலமாகத்தான் குழந்தைகள் பிறந்தது தெரிய வந்த நிலையில், 4 மாதத்தில் எப்படி பிறக்கும் என்கிற சர்ச்சை வெடிக்க, 5 வருஷத்துக்கு முன்னாடியே ரெஜிஸ்டர் திருமணம் நடந்து விட்டதாக கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். நயன்தாராவின் இரு ஆண் குழந்தைகளும் அழகாக வாழை இலை போட்டு அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.