தலைப்பே வேற லெவல்!.. ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்த நயன்!.. வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!...
நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்தில் இவரின் அழகான தோற்றாத்தினால் முதல் படத்திலேயே இவருக்கென ரசிகர்கள் அதிகமாகினர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் வாங்கினார்.பின் நடிகர் சிம்புவுடன் இணைந்து வல்லவன் திரைப்படத்தில் பணியாற்றினார். இப்படத்திற்கு பின் சிம்புவிற்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. நிஜ வாழ்வில் பல தடைகளை தகர்த்து முன்னேறிய நடிகைகளில் இவர் ஒருவர்.
இதையும் படிங்க:நயன்தாராவே ஒண்ணும் கொடுக்கல!.. கல்யாணம் ஆன பின்னரும் ஷாருக்கான் கிட்ட ஃபீலிங்கை கன்ட்ரோல் பண்ண முடியல போல!..
பின் இவர் விஜயுடன் இணைந்து வில்லு, அஜித்துடன் பில்லா என பல திரைப்படங்களில் நடித்தார். இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியை தேடி தந்தது. பின் இவர் கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நடிக்க தொடங்கினார்.
அறம், ஓ2 போன்ற படங்களின் மூலம் கதாநாயகனும் இல்லாமல் நடிக்க முடியும் என்ற அத்தியாயத்தை அறிமுகப்படுத்தினார். இவர் கடந்த ஆண்டு பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை மணம் முடித்தார். இவர்களின் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. முக்கிய சினிமா பிரபலங்கள் மட்டுமே இவர்களின் திருமணத்தில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:கூட இருந்தே குழி பறிக்கும் புஸ்ஸீ ஆனந்த்! மிஷ்கின் விவகாரத்தில் பொம்மையாக மாறிய விஜய்
இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மிக பெரிய அளவில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. இன்று தனது கணவரான விகேஷ்சிவன் பிறந்த நாள் என்பதால் இன்று தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பினை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
மண்ணாங்கட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயனுடன் இணைந்து யோகிபாபு நடிக்கவிருக்கிறார். மேலும் லக்ஷ்மண்குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தினை பிரபல யூடியூப்பரான டியூட் விக்கி இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு நான் காலி பாடல் இசையமைப்பாளரான சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான படபிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்ற நிலையில் தற்போது இதன் போஸ்டரை நயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி கொண்டிருக்கிறது.