சொந்த படத்துக்கு மட்டும் தான் வருவேன்!.. ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன்தாரா.. பிரியாமணி தான் கடைசியா!..

Published on: August 30, 2023
---Advertisement---

இயக்குநர் அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலமாகத்தான் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். விஜய்யை வைத்து அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்கிய அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்திலும் நயன்தாராவையே ஹீரோயினாக்கி பாலிவுட்டிலும் அவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஆனால், நடிகை நயன்தாரா சென்னையில் நடைபெற்ற ஜவான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது ரசிகர்களை மட்டுமின்றி இயக்குநர் அட்லீ மற்றும் ஷாருக்கானையே அப்செட்டில் ஆக்கி உள்ளது.

இதையும் படிங்க: ஷாருக்கானை ஏமாத்திட்டு சைக்கிள் கேப்பில் அட்லீ ஓட்டிய இன்னொரு படம்!.. மேடையில் வச்சு செய்த ஜவான்!..

இந்த வயதிலும் தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து நிகழ்ச்சியில் ஷாருக்கானே கலந்து கொள்ளும் நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா மட்டும் ஏன் சினிமா புரமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டேன் என அடம்பிடிக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை நயன்தாரா சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருதுக்கெல்லாம் வந்த நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கும் வருவார் என ரசிகர்கள் பெரிதும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், தனது ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டார் நயன்தாரா.

இதையும் படிங்க: துணியே இல்லனா கூட இப்படி இருக்காது… ராஷ்மிகா காட்டியது ரொம்ப டூமச்சு… ஆஹான்!

சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களின் புரமோஷனுக்கு மட்டுமே செல்வேன் என்கிற உறுதியில் இருக்கும் நயன்தாரா ஷாருக்கானின் ஜவான் படத்தின் புரமோஷனையும் புறக்கணித்துள்ளார். காவாலா பாட்டுக்கு நடனமாடி விட்டு பாலிவுட்டில் தனியாகவே ஜெயிலர் படத்தை எல்லாம் தமன்னா புரமோட் செய்திருந்ததை ரசிகர்கள் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

நயன்தாரா வராத நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் நடிகை பிரியாமணி தனது லியோ பேச்சால் கவர் செய்து கைதட்டல்களை அள்ளி அசத்தி விட்டார். அனிருத் பற்றி பேசும் போது ஜெயிலர், ஜவான் அடுத்து லியோ என பிரியாமணி பேசியதுமே அரங்கில் இருந்த விஜய் ரசிகர்கள் சில நிமிடங்கள் அவரை பேச விடாமல் லியோ.. லியோ என கத்தி வெறித்தனம் காட்டி விட்டனர்.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.