அடிவாங்கிய அன்னபூரணி.. இதுக்கு மேல முடியாது!.. பெரிய கும்பிடு போட்டு மன்னிப்புக் கேட்ட நயன்தாரா!..

by Saranya M |   ( Updated:2024-01-18 20:55:00  )
அடிவாங்கிய அன்னபூரணி.. இதுக்கு மேல முடியாது!.. பெரிய கும்பிடு போட்டு மன்னிப்புக் கேட்ட நயன்தாரா!..
X

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி எல்லாம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் போது வராத பிரச்சனை நயன்தாரா படத்துக்கு மட்டும் ஏன் என சினிமா பிரபலங்களும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை ஓடிடியில் இருந்து நீக்குவது சினிமாவுக்கு நல்லதல்ல என வெற்றிமாறன் குரல் கொடுத்திருந்தார். ராம பக்தர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனம், நயன்தாரா, டைரக்டர் நிலேஷ் கிருஷ்ணா மீது வழக்கு தொடரப்பட்டது. ஜீ ஸ்டூடியோ உடனே பலத்த அடி வாங்குவோம் என அறிந்துக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து அந்த படத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். உடனடியாக ஓடிடியில் இருந்து அன்னபூரணி நீக்கப்பட்டது.

இதையும் படிங்க: டைட்டானிக் ரோஸே தோத்துடுவாங்க!.. ஆறடி வளர்ந்த ஆரஞ்சு பழமா இருக்கும் ஹனி ரோஸின் ரீசன்ட் க்ளிக்ஸ்!..

நயன்தாராவுக்கு எதிராக வடக்கில் கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அடுத்தடுத்த படங்களுக்கு பெரும் சிக்கல் உருவாகி விடும் என்பதை அறிந்த நயன்தாரா, ஜெய் ஸ்ரீராம் என தற்போது சரணடைந்து மன்னிப்புக் கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில், எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி பற்றி கடந்த சில நாட்களாக பல சர்ச்சைகள் உருவாகி இருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் அறிக்கையை வெளியிடுகிறேன். அன்னபூரணி படத்தை வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படம் உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க: விக்குக்கு மட்டுமே பல லட்சம் செலவு!.. விஜய் பட ஹீரோயினை வச்சுக்கிட்டே சத்யராஜ் சொன்ன மேட்டர்!..

அன்னபூரணி வாயிலாக ஒரு நல்ல கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி விட்டோம் என்பதை தற்போது உணர்ந்து விட்டோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்ட படத்தை ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது டீமுக்கும் ஒருபோதும் இல்லை.

ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வருகிறேன். நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருப்பேனா எனக் கேட்டுள்ளார் நயன்தாரா. அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது எனது செயல் புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் எனக்கூறியுள்ளார்.

Next Story