Connect with us

Cinema News

மீண்டும் சர்ச்சையில் சிக்க காத்திருக்கும் நயன்! 90ஸ் ஹிட் படத்தில் நடிக்க போறாராம்… வாய் சும்மா இருக்குமா?

Nayanthara: நடிகை நயன்தாராவுக்கு நேரம் சரியில்லை என்பது சரியாக தான் போச்சுப்பா என்ற ரீதியில் தற்போது இன்னொரு விஷயமும் நடக்க இருக்கிறது. அது நடந்துவிட்டால் கண்டிப்பாக நயனுக்கு மேலும் சிக்கல் கூட உருவாகலாம் என இப்போதே ரசிகர்கள் கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.

லேடி சூப்பர்ஸ்டாராக ஜாலியாக வலம் வந்த நடிகை நயன்தாரா தற்போது தொடர்ந்து அடி மேல் அடி வாங்கி வருகிறார். திருமணத்தில் தொடங்கிய சர்ச்சை இன்னமுமே ஓயவில்லை. அதன் பின்னர் வாடகை தாய் மூலம் குழந்தை, பிசினஸ் என எல்லாத்துலையுமே அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் வந்தது.

இதையும் படிங்க: ரஜினி பட வசூலை பார்த்து உருவான அஜித் படம்!.. கடைசியில் ரிசல்ட் இதுதான்!..

சரி படமாவது நன்றாக போகும் என்று பார்த்தால் கடைசியாக அவர் நடித்த 11 படங்களுமே அட்டர் பிளாப்பாகி விட்டது. அதிலும் அன்னப்பூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸுக்கு வந்து ராமர் குறித்து அவதூறாக இருந்த டயலாக் கலவரத்தினை கிளப்பியது. அதை தொடர்ந்து அந்த படமும் ஓடிடியில் இருந்து தூக்கப்பட்டது.

இப்படி ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்னை இருக்கும் நிலையில் நயன்தாராவுக்கு தற்போது இன்னொரு பிரச்னை உருவாகி இருக்கிறது. 1990ம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆடி வெள்ளி. இப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட் அடித்த படம் இது. இந்நிலையில், ராமநாராயணன் மகன் முரளி ராமசாமி. ஆடிவெள்ளியை ரீமேக் செய்ய இருக்கிறாராம். சீதா நடித்த வேடத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். நயன் ஏற்கனவே சீதையாக நடித்து விட்டார். 

இதையும் படிங்க: ரஜினி கொடுத்த வாய்ப்பை யூஸ் பண்ணி இருந்தா 10 வீடு வாங்கி இருப்பேன்!. புலம்பும் செந்தில்…

மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாகவும் கலக்கி இருப்பார். இதற்காக அவர் நிஜ வாழ்க்கையில் விரதம் இருந்த கதையெல்லாம் நடந்தது. தற்போது இப்படத்தினை ஒப்புக்கொண்டால் மீண்டும் விரதம் இருக்க தொடங்கிடுவாரோ என ரசிகர்கள் தற்போதே கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் கொஞ்சம் மிஸ்ஸாகி இப்படத்தாலும் நயன் கேரியர் மீண்டும் ஆட்டம் காணுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனா? நேரம் அப்படில இருக்கு.

google news
Continue Reading

More in Cinema News

To Top