More
Categories: Cinema News latest news

போனி மாம்ஸ் பொண்ணு நயன்தாராவுக்கு போட்டியா களம் இறங்கிடிச்சி.! முழு விவரமும் உள்ளே.!

பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் முதன்முதலாக இயக்கி திரையில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா முன்னணி வேடத்தில் நடித்திருப்பார். மேலும், யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின் என பலர் நடித்திருப்பர்.

Advertising
Advertising

ஒரு போதை மருந்து கும்பலிடம் நயன்தாரா எப்படி குடும்பத்தோடு சிக்கினார், பிறகு எப்படி அதிலிருந்து மீண்டார் என்பதை காமெடி த்ரில்லர் கலந்து நெல்சன் இயக்கி இருப்பார்.

தற்போது கோலமாவு கோகிலா திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இந்த திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாதாம். நேரடியாக ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளதாம். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சித்தார்த் செங்குப்தா எனும் இயக்குனர் இயக்கி வருகிறார். மற்ற டெக்னீஷியன்கள் யார் என்பது விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படியுங்களேன் – இந்த அனிருத்துக்கு இதே வேலையா போச்சி.! தளபதி விஜயின் இந்த பாட்டும் காப்பியா.! ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்.!

நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால், நயன்தாராவின் நடிப்புக்கு கொஞ்சம் ஈடுகொடுத்து ஜான்வி நடிப்பாரா என்பதை படம் வெளியான பின்னர் தான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

Published by
Manikandan

Recent Posts