‘லேடி சூப்பர் ஸ்டார்’னா இவங்கதான்! நயனை தூக்கி வச்சு கொண்டாடுறதே வேஸ்ட் - பளீச்சினு சொன்ன கஸ்தூரி

by Rohini |
nayan
X

nayan

சூப்பர் ஸ்டார் பிரச்சனையே இன்னும் ஓயல. அதுக்குள்ள லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய விவாதம் இணையத்தில் கிளம்பி இருக்கிறது. நடிகை கஸ்தூரி சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த போது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் வெளிப்படையான தைரியமான தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார் .

அதாவது சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது நம் தலைவர் ரஜினி மட்டும் தான் என கூறினார். அதற்காக மற்றவர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. அந்த காலத்தில் இருந்தே எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் இவர்களை அடுத்து விஜய் - அஜித் என அடுத்தடுத்த தலைமுறைகள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்.

இதையும் படிங்க : அந்த படத்துல நடிச்சதுதான் அஜித் எடுத்த கேவலமான முடிவு – ட்விட்டரில் காயத்ரி சரமாரி பதில்

எத்தனையோ பேர்கள் வந்தாலும் அவர் அடைந்த அந்த சகாப்தத்தை யாராலும் மறுக்கவும் முடியாது. பறிக்கவும் முடியாது என கூறினார். மேலும் நடிகைகளிடம் சூப்பர் ஸ்டார் யார் என்பதை பற்றி நிருப ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.

nayan1

nayan1

அதற்கு பதில் அளித்த கஸ்தூரி நடிகைகளை பொறுத்த வரைக்கும் இந்த நடிகையை நம்பி மட்டுமே படத்தை பார்க்கலாம். அவரை மையப்படுத்தி இந்த படம் அமைகிறது. இப்படி இருந்தால் தான் அது லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்ல முடியும். அந்த வகையில் பார்க்கும்போது இந்த காலத்தில் அப்படிப்பட்ட ஒரு நடிகை இல்லை என கூறி இருக்கிறார்.

ஆனால் ஆரம்ப காலத்தில் கே பி சுந்தராம்பாள் அந்த மாதிரியான ஒரு தாக்கத்தை தான் ஏற்படுத்தியிருந்தார். அவர் நடித்த படங்கள் எல்லாம் அவரைச் சுற்றியே அமைந்திருக்கும். அவருக்காகவே கூட்டம் கூட்டமாக பார்க்கப் போன ரசிகர்கள் ஏராளம்.

இதையும் படிங்க : எப்பா இது ‘ஜெய்லர்’ படமே இல்லை! ஆசையா போன ரசிகர்களுக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி

அவரை அடுத்து விஜயசாந்தியை சொல்ல முடியும். இவர்கள் இரண்டு பேரையும் அடுத்து மற்ற எந்த நடிகைகளும் அப்படி ஒன்றும் தெரியவில்லை. நயன்தாராவை பொருத்தவரைக்கும் அவர் நடித்த மாயா என்ற படம் மட்டுமே அந்த மாதிரி கதையில் அமைந்திருந்தது. மற்றபடி எந்த படமும் சரியாக போகவில்லை என கஸ்தூரி கூறினார்.

Next Story