லோ பட்ஜெட் படமா? அதுவும் நானா? கனா இயக்குனருக்கு நடந்த விபரீதம்.. அன்னபூரணி என்னம்மா நீங்க?

by Rohini |
nayan
X

nayan

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் நயன்தாரா டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணமாகி இரு குழந்தைகள் ஆன பிறகும் இன்னும் தன் மார்கெட்டை தக்க வைத்து வருகிறார்.சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

அதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்தப் படம் இப்போது டிராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: இதுக்கு அந்த பணப்பெட்டியை எடுத்துப் போயிருக்கலாம்! அர்ச்சனாவுக்கு கொடுத்த 50 லட்சம் என்னாச்சு?

ஏனெனில் அந்த படத்தை பிரின்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருந்ததாம். கனா படத்தை பார்த்த பிரின்ஸ் நிறுவனம் அருண்ராஜா காமராஜாவை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார்களாம். அதுவும் கார்த்தியை வைத்து எடுக்க திட்டமிட அவருக்காக ஒரு கதையும் ரெடி பண்ண சொல்லியிருக்கிறார்கள். அருண்ராஜாவும் கதையை ரெடி பண்ண கார்த்தியை ஒருவருடம் கழித்துதான் அருண்ராஜாவின் கண்ணில் காட்டினார்களாம்.

அதன் பின் கார்த்தி பிஸியாக பின் தனுஷை வைத்து எடுக்கலாம் என தனுஷுக்காக கதையை மாற்ற சொல்லியிருக்கிறார்கள். அருண்ராஜாவும் தனுஷுக்காக கதையை மாற்றியும் அவரும் பிஸியாக இருந்தாராம். இப்படி 5 வருஷம் பிரின்ஸ் நிறுவனத்தில் சும்மாவே இருந்திருக்கிறார். அதன் பிறகே நெஞ்சுக்கு நீதி, லேபிள் என்ற வெப் சீரிஸ் போன்ற படங்களை எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஓவரா இருக்கு.. அடக்கி வாசி!. ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதாவை கண்டித்த எம்.ஜி.ஆர்…

கடைசியாக நயன்தாராவுக்கு 5 கதைகளை சொன்ன அருண்ராஜா அந்த 5 கதைகளும் நயனுக்கு பிடித்துப் போக எதாவது ஒரு கதையை பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். ஆனால் பிரின்ஸ் நிறுவனம் இருக்கிற கதையிலேயே லோ பட்ஜெட் கதையாக தேர்ந்தெடுக்க அது நயனுக்கு டென்ஷனாகி விட்டதாம். எனக்கு லோ பட்ஜெட் கதையா என விலகிவிட்டாராம். இந்த நிலையில் அருண்ராஜாவின் அலுவலகத்தையும் பிரின்ஸ் நிறுவனம் காலி பண்ண சொல்லிவிட்டதாம். ஆனால் கண்டிப்பாக அருண்ராஜாவுக்காக நயன் நடிக்க வருவார் வேறொரு தயாரிப்பு நிறுவனத்தில் என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

Next Story