அடுத்த பட ஷூட்டிங்கையும் முடித்த லேடி சூப்பர் ஸ்டார்!.. இந்த டெஸ்ட்டாவது சிக்ஸர் அடிக்குமா?..

by Saranya M |   ( Updated:2024-01-31 10:20:16  )
அடுத்த பட ஷூட்டிங்கையும் முடித்த லேடி சூப்பர் ஸ்டார்!.. இந்த டெஸ்ட்டாவது சிக்ஸர் அடிக்குமா?..
X

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட் நடிகைகளை மிரள வைத்தார்.

ஆனால், அதேவேளையில் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இறைவன் மற்றும் அன்னபூரணி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பலத்த அடி வாங்கின. இந்நிலையில், இயக்குனர் சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து விட்டதாக நடிகை நயன்தாரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அட்லீ குழந்தைக்கு அதுக்குள்ள ஒரு வயசு ஆகிடுச்சா!.. பிறந்தநாளை எங்கே கொண்டாடுறாங்க பாருங்க!..

டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் டெஸ்ட் கிரிக்கெட் பிளேயராக நடித்து வருகிறார். மாதவன் கோச்சாக நடிக்கிறார் என தெரிகிறது. நயன்தாரா ஹோம்லி லுக்கில் சேலை அணிந்தபடி வந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. சர்ப்ரைஸ் என்ட்ரி ஆக மீரா ஜாஸ்மினும் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தென்பட்டுள்ளார்.

நிச்சயம் இந்த திரைப்படம் நயன்தாராவுக்கு தமிழில் நல்லதொரு கம் பேக் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு சம்மருக்கு பல பெரிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நயன்தாராவின் டெஸ்ட் திரைப்படமும் சம்மர் ரிலீசாக வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிம்புவுக்கு முதல் 100 கோடி பட்ஜெட் படம்!.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ வருது தெரியுமா?.. ராஜ்கமல் அறிவிப்பு!

ஏற்கனவே இந்த ஆண்டு கிரிக்கெட்டை மையப்படுத்தி தமிழில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகப் போகிறது. இந்நிலையில் இன்னொரு கிரிக்கெட் படமா என்கிற கேள்வியும் ரசிகர்கள் கேட்காமல் இல்லை.

Next Story