More
Categories: Cinema News latest news

சரத்துக்கு நந்தினி மாதிரி ரஜினிக்கும் ஒரு நந்தினி! யாருனு தெரியுமா? இது தெரியாம போச்சே

சினிமாவை பொறுத்தவரைக்கும் ஹீரோ ஹீரோயின்கள் ஒரு பக்கம் மாஸ் காட்டினாலும் அவர்களுக்கு ஈடாக அவர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக அமைந்த கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் தான். காலம் காலமாக சினிமாவிற்கு என்றே எழுதப்பட்ட விதி போல ஹீரோ,ஹீரோயின், வில்லன், காமெடி என இந்த கதாபாத்திரங்கள் அமைவது உண்டு.

அந்த காலத்தில் வில்லனாக நம்பியார் அவருக்கு அடுத்த தலைமுறையாக ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் ,ரகுவரன் இவர்களுக்கு அடுத்த தலைமுறையாக பிரகாஷ்ராஜ் என ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வில்லன் கதாபாத்திரங்கள் மாறி வருகின்றன.

Advertising
Advertising

இதையும் படிங்க : ரிலீஸுக்கு முன்பே விஜய் படத்தை காலி செய்த ஜெயிலர்… செம மாஸ் காட்டும் தலைவர்!..

ஆண் நடிகர்கள்தான் வில்லன்களாக நடிக்க முடியுமா நாங்களும் நடிப்போம் என பெண் நடிகைகளும் ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து மாஸ் காட்டி இருக்கின்றனர். அதுவும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அது நாவலாக இருந்தாலும் வில்லியாக நந்தினி கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்திருப்பார் கல்கி. அதை படத்தில் தத்துரூபமாக காட்டியிருப்பார் மணிரத்தினம்.

sarath1

அப்படி நந்தினி கதாபாத்திரம் போன்றே ரஜினி படத்திலும் ஒரு நந்தினியாக ஒரு நடிகை வெளுத்து கட்டி இருப்பார். அது படையப்பா படத்தில் நீலாம்பரி ஆக நடித்த ரம்யா கிருஷ்ணன். அந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தை வடிவமைத்தது ரஜினி தானாம்.

இதையும் படிங்க :ஜெயிலர் டிரெய்லர் விக்ரம் மாறியே இருக்கே!.. போட்டோ போட்டு கம்பேர் பண்ணி கலாய்க்கும் நெட்டிசன்கள்..

இந்த நிலாம்பரி கதாபாத்திரத்தை பொன்னியின் செல்வனில் வரும் நந்தினியின் கதாபாத்திரத்தை வைத்து தான் ரஜினி வடிவமைத்தாராம் . ஆனால் படம் வெளியான பிறகு நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனை முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் பலபேர் ஒப்பிட்டு பேசி இருந்தார்கள். ஆனால் உண்மையில் ரஜினி நந்தினியை மையப்படுத்தி தான் இந்த நிலாம்பரி கேரக்டரை உருவாக்கினார் என பிரபல சினிமா தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini