Cinema News
சரத்துக்கு நந்தினி மாதிரி ரஜினிக்கும் ஒரு நந்தினி! யாருனு தெரியுமா? இது தெரியாம போச்சே
Published on
By
சினிமாவை பொறுத்தவரைக்கும் ஹீரோ ஹீரோயின்கள் ஒரு பக்கம் மாஸ் காட்டினாலும் அவர்களுக்கு ஈடாக அவர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக அமைந்த கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் தான். காலம் காலமாக சினிமாவிற்கு என்றே எழுதப்பட்ட விதி போல ஹீரோ,ஹீரோயின், வில்லன், காமெடி என இந்த கதாபாத்திரங்கள் அமைவது உண்டு.
அந்த காலத்தில் வில்லனாக நம்பியார் அவருக்கு அடுத்த தலைமுறையாக ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் ,ரகுவரன் இவர்களுக்கு அடுத்த தலைமுறையாக பிரகாஷ்ராஜ் என ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வில்லன் கதாபாத்திரங்கள் மாறி வருகின்றன.
இதையும் படிங்க : ரிலீஸுக்கு முன்பே விஜய் படத்தை காலி செய்த ஜெயிலர்… செம மாஸ் காட்டும் தலைவர்!..
ஆண் நடிகர்கள்தான் வில்லன்களாக நடிக்க முடியுமா நாங்களும் நடிப்போம் என பெண் நடிகைகளும் ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து மாஸ் காட்டி இருக்கின்றனர். அதுவும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அது நாவலாக இருந்தாலும் வில்லியாக நந்தினி கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்திருப்பார் கல்கி. அதை படத்தில் தத்துரூபமாக காட்டியிருப்பார் மணிரத்தினம்.
அப்படி நந்தினி கதாபாத்திரம் போன்றே ரஜினி படத்திலும் ஒரு நந்தினியாக ஒரு நடிகை வெளுத்து கட்டி இருப்பார். அது படையப்பா படத்தில் நீலாம்பரி ஆக நடித்த ரம்யா கிருஷ்ணன். அந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தை வடிவமைத்தது ரஜினி தானாம்.
இதையும் படிங்க :ஜெயிலர் டிரெய்லர் விக்ரம் மாறியே இருக்கே!.. போட்டோ போட்டு கம்பேர் பண்ணி கலாய்க்கும் நெட்டிசன்கள்..
இந்த நிலாம்பரி கதாபாத்திரத்தை பொன்னியின் செல்வனில் வரும் நந்தினியின் கதாபாத்திரத்தை வைத்து தான் ரஜினி வடிவமைத்தாராம் . ஆனால் படம் வெளியான பிறகு நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனை முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் பலபேர் ஒப்பிட்டு பேசி இருந்தார்கள். ஆனால் உண்மையில் ரஜினி நந்தினியை மையப்படுத்தி தான் இந்த நிலாம்பரி கேரக்டரை உருவாக்கினார் என பிரபல சினிமா தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணன் கூறினார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறியிருப்பவர் விஜய். சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்த விஜய் இப்போது அவருக்கு...
Kamalhassan: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் எல்லா மொழி படங்களுமே கேமியோவை சாதாரணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில் புது...
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு விஜய்...
கமல், மணிரத்னம் கூட்டணியில் நாயகன் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் தக் லைஃப். நான் காயல்பட்டணம்காரன் என்ற...
Trisha: நடிகை திரிஷா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து தொழிலதிபர் வருண் என்பவருடன் நிச்சயம் செய்தார். ஆனால் கடைசியில் அது திருமணத்தில்...