
Cinema News
நீலிமா ராணியின் வித்யாசமான pregnancy போட்டோ ஷூட் – இப்படி யாருமே யோசிச்சதில்லப்பா!
கர்ப்பமான நிலையில் சீரியல் நடிகை நீலிமா ராணி நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் வைரல்!
சின்னத்திரை நடிகையான நீலிமாராணி குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து மெட்டி ஒலி, கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும், திரைப்படங்களிலும் ஒரு சில குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கார்த்தி நடித்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இவர் இசை வாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

neelima raani
இதையும் படியுங்கள்: எட்டிப்பாத்தா எல்லாமே தெரியுது.. இப்படியெல்லாமா போஸ் குடுப்பாங்க!
இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி நேற்று கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சாமி முன் அமர்ந்து கர்ப்பக்கடவுளாகவே போட்டோ சூட் நடத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.