இரு நடிகைகளை அசால்ட் பண்ணிய சிம்பு!.. மாமா வேலை பாத்ததுதான் மிச்சம்.. புலம்பும் இயக்குனர்...

simbu
தமிழ் சினிமாவில் சிம்பு ஒரு நம்பிக்கைக் குரிய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்மபகாலத்தில் ஒரு ப்ளே பாயாக இருந்த சிம்பு இப்போது தான் சினிமாவிற்காக தன்னை மெருகேற்றி வருகிறார்.
அந்த வகையில் தனுஷ் ஒரு உயரத்தை அடைந்து விட்டார். அதே போல் சிம்பு ரசிகர்களும் அந்த உயரத்தை சிம்பு அடையவேண்டும் என தங்கள் ஆசையை கூறிவருகின்றனர். அந்த ஆசைக்கும் சிம்பு தன்னை தயார் படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க :வாலன்டியரா போய் வண்டியில நான் ஏன் ஏறணும்… ரஜினி பேச்சுக்கு ’நோ ரிப்ளே’.. கப்சிப் மோடில் விஜய்!
இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக ஒரு பெரிய பட்ஜெட்டில் கமல் புரடக்ஷனில் ஒரு புதிய படத்திற்காக தன்னை சீர்படுத்தி வருகிறார். தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் அந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை இயக்கிய நந்து சிம்புவை பற்றி ஒரு சில விஷயங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். வல்லவன் படத்தில் இயக்குனர் நந்துவும் நெல்சனும் உதவியாளர்களாக இருந்தார்களாம். அதனால் நெல்சனுக்கும் உங்களுக்குமான நட்பு எந்த மாதிரியானது என இயக்குனர் நந்துவிடம் நிரூபர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த நந்து ‘ எனக்கும் நெல்சனுக்கும் ஒரே ஒரு ஒற்றுமைதான். சிம்புவுக்காக மாமா வேலை பார்த்தோம். அவ்வளவுதான்’ என வெளிப்படையாக கூறி அதற்கு பின்னனியில் இருந்த சம்பவத்தை விளக்கினார். நந்து சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை எடுத்தார், அதே வேளையில் நெல்சன் வேட்டை மன்னன் என்ற படத்தை எடுத்தார்.
இதையும் படிங்க : சந்தேகப்பட்டு கவிஞர் வாலி வைத்த டெஸ்ட்!… அசால்ட் பண்ணி டேக் ஆப் ஆன இசைஞானி!..
ஆனால் அந்த இரு படங்களுமே டிராப் ஆகிவிட்டன. டிராப் ஆனாலும் வேட்டை மன்னன் படத்தில் நெல்சன் ஹன்சிகாவை அழைத்து வந்து சிம்புவுடன் ஒரு லிப் லாக் சீன் எடுத்துக் கொடுத்தார். நானும் கெட்டவன் படத்துக்காக ஒரு நடிகையை அழைத்து வந்து சிம்புவுடன் லிப் லாக் சீனை எடுத்தேன்.
இதைதான் நானும் நெல்சனும் சிம்புவுக்காக மாமா வேலை பார்த்தோம் என சொல்கிறேன். நீங்கள் வேறு எதுவும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என நந்து கூறினார்.