Connect with us

Cinema News

வாலன்டியரா போய் வண்டியில நான் ஏன் ஏறணும்… ரஜினி பேச்சுக்கு ’நோ ரிப்ளே’.. கப்சிப் மோடில் விஜய்!

கோலிவுட்டில் தற்போது பெரிய பிரச்னையாக இருப்பதே அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற பிரச்னை தான். விஜயிற்காக ஒரு கும்பலும், ரஜினிக்காக ஒரு கும்பலும் போட்டா போட்டி கொண்டு இருக்கின்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட விஜயோ, ரஜினியோ எதை பற்றியும் பேசவே இல்லை.

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என கோலிவுட்டில் பேச்சுக்கள் தொடங்கியது. இதைதொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் காக்கா, கழுக்கு கதை ஒன்றினை சொல்லினார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாக பரவியது. ரஜினிகாந்த் விஜயை தான் சொல்லினார் என பலரும் கிசுகிசுக்க தொடங்கினர்.

இதையும் படிங்க: வாலி சொன்ன ஒரு வார்த்தை!.. பாரதிராஜா வாழ்க்கையில் அப்படியே பலித்த அந்த சம்பவம்!..

ஆனால், பலர் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படம் ப்ளாப் ஆன சமயத்திலும், அவர் அரசியல் பிரவேசம் சர்ச்சையில்கூட பலர் அவரை விமர்சித்து வந்தனர். அவர்களை தான் ரஜினிகாந்த் கூறினார் என்றும் கூறி வருகின்றனர். அவருக்கு விஜய் மீது எப்போதுமே தனி பிரியம் இருக்கும். கண்டிப்பாக விஜயை அவர் நேரடியாக விமர்சிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் பலர் விஜய் கண்டிப்பாக தன்னுடைய ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். கடந்த சில படங்களாகவே விஜயின் ஆடியோ ரிலீஸ் பேச்சுக்கு ரசிகர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாம் தக் மோமண்ட்டாக மாறியும் விடுகிறது.

இதையும் படிங்க:  ‘முன்பே வா’ பாடல் உருவாக இத்தனை பஞ்சாயத்தா? வாலிக்கும் இயக்குநருக்கும் இடையே முற்றிய வாக்குவாதம்..

ஆனால் லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சுக்கு எந்தவித பதிலும் இருக்கவே இருக்காது என்பது தான் விஜய் தரப்பு முடிவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எப்போதும் போல பொதுவான பேச்சாகவே அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதிலும் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி எங்கு நடக்கும் என்பது கூட இதுவரை குழப்பத்திலேயே இருக்கிறதாம்.

ஆனால் மலேசியாவோ, மதுரையோ இல்லாமல் கண்டிப்பாக சென்னையிலேயே நடத்த படக்குழு தரப்பில் இருந்து முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மலேசியாவில் மழைக்காலம் என்பதால் வெளி இடத்தில் நடத்த முடியாது. அதுப்போல பிரபல அரங்குகள் இவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் புக்கிங்கில் இருக்கிறது. இதனால் சென்னை தான் என்பது முடிவாகி இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் சென்னையின் அரங்குகள் குறித்து விரைவில் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top