ஜெயிலர் படத்துக்கு பதில் இந்த கதையில் தான் ரஜினி நடிச்சிருக்கணும்… தப்பிச்சிட்டாருனு சொல்லுங்க…

Jailer: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு படம் இயக்குவது யாருக்கு தான் பிடிக்காது. ரஜினிகாந்தை வைத்து தான் ஒரு படம் இருக்க இருந்ததாகவும் அந்த படம் நடக்காமல் போன கதை குறித்து வைரல் இயக்குனர் ஒருவர் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குனர்கள் சிலருக்கு தான் தொட்டதெல்லாம் துலங்கும் மேஜிக் நடக்கும். அப்படி ஒருவராக இருந்தவர் தான் இயக்குனர் லிங்குசாமி. முதல் படமான ஆனந்தம் தொடங்கி வரிசையாக ரன், சண்டக்கோழி, பீமா, பையா என தொடர்ச்சியாக வெற்றி படங்களை குவித்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிக்க சொன்ன ரஜினி!.. பதறிய தயாரிப்பாளர்!.. அப்படி என்ன கோபம்!..

ஆனால் விதி யாரை விட்டது என்ற ரீதியில் சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தினை இயக்கினார். அதுவா பிரச்னை என்றால் அதில் இல்லை. நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கி இருக்கேன் என அவர் பேசியது தான் பிரச்னையாக அமைந்தது. படம் ப்ளாப்பான போல அவர் கேரியரும் காலியானது.

அதை தவிர்த்து அவரின் அடுத்தடுத்த படங்கள் ஸ்பீட் எடுக்காமல் மார்க்கெட்டை இழந்தார். இந்நிலையில் தன்னுடைய பேட்டி ஒன்றில் லிங்குசாமி பேசி இருப்பது, ரஜினி சாரிடம் ஒரு படம் பண்ண என்னுடைய நிறுவனத்தில் கேட்ட போது தான் தர்பார் படம் நடந்தது. அலெக்ஸ் பாண்டியன் கதையை வைத்து தான் அந்த கதையை உருவாக்கினேன்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..

பின்னர் பிரச்னையால் அந்த படம் வேறு நிறுவனத்துக்கு கைமாறியது. மற்ற நடிகர்களை விட ரஜினிகாந்தை எளிதாக பார்த்துவிடலாம். ரஜினி சாருக்கு கதை செய்ய ஆசை இருந்தது. ஆனால் நிறைய கதைகளை நானே தவிர்த்துவிட்டேன். ரன் சமயத்தில் அவரே என்னிடம் கதை கேட்டதும் நடந்தது. சமீபத்தில் வாரியர் ஷூட்டிங் சமயத்தில் ரஜினி சாருக்கு கதை செய்தேன்.

ரஜினி சாரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்து இருந்தது. எத்தனை நாளில் பண்ணுவீங்க என்றார். மூணு மாதத்தில் முடிச்சிருவேன் என்றேன். வாரியர் ஷூட்டிங் இருந்ததால் அந்த கதை முடியாமல் போனது. அந்த கேப்பில் தான் ரஜினி சார் ஜெயிலர் படத்தில் நடித்தார். விரைவில் அவருடன் கண்டிப்பாக இணைவேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Related Articles

Next Story