புதிய அவதாரம் எடுக்கும் நெல்சன்!. ஆனா அதுக்கும் பெரிய மனசு வேணும்!.. செம கிரேட்டுப்பா!..

Published on: September 25, 2023
---Advertisement---

விஜய் டிவியில் பல வருடங்களாக பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்தவர் நெல்சன். சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அப்படம் டிராப் ஆனது. அதன்பின் மீண்டும் விஜய் டிவிக்கே சென்றுவிட்டார். சில வருடங்கள் கழித்து கோலமாவு கோகிலா மூலம் மீண்டும் இயக்குனரானார்.

நயன்தாரா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய படம்தான் டாக்டர். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்து ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: சொகுசு கார்.. சொந்தமா பண்ணைத் தோட்டம்!.. என்னம்மா வாழுறாருப்பா ஜிபி முத்து!.. புது வீடியோ பார்த்தீங்களா?..

அதன்பின் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதோடு, சமூகவலைத்தளங்களில் இப்படத்தையும், நெல்சனையும் கடுமையாக ட்ரோல் செய்தனர். நெல்சனுக்கு மன உளைச்சல் கொடுக்கமளவுக்கு கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஆனாலும், அதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் ஜெயிலர் பட கதையை உருவாக்கி ரஜினியை வைத்து இயக்கினார். இந்த படம் மெகா ஹிட் அடித்து ரூ.700 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. அதோடு, ரஜினிக்கும் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள இப்படம் உதவியிருக்கிறது.

இதையும் படிங்க: களைகட்டும் லியோ ஆடியோ லான்ச் வேலை!.. வெளியான வீடியோ!.. என்னென்னமோ சொன்னாங்களே!..

இந்நிலையில், நெல்சன் ஒரு புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். நெல்சனிடம் கோலமாவு கோகிலா முதல் ஜெயிலர் வரை உதவியாளராக வேலை செய்தவர் சிவபாலன். இவர் நெல்சனின் நண்பரும் கூட. இவர் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை நெல்சனே தயாரிக்கவுள்ளாராம். அதாவது, நெல்சன் அவரை இயக்குனராக அறிமுகம் செய்யவிருக்கிறார்.

இந்த படத்தில் கவின் ஹீரோவாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. பிரியங்கா மோகனை நெல்சன்தான் டாக்டர் படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார். டாடா ஹிட் படம் மூலம் கவினுக்கும் இப்போது ஒரு நல்ல மார்கெட் உருவாகியுள்ளது. மொத்தத்தில் நண்பனுக்காக நெல்சன் தயாரிப்பாளராக மாறவிருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த இயக்குனர் படத்துக்கு ரெடியான சிவகார்த்திகேயன்!. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.