நேற்று ஷோ கேஸ் என்ற பெயரில் ஜெய்லர் படத்தின் டிரெய்லரை வெளியிட்டது படக்குழு. லோகேஷால் எப்படி லோகி யுனிவெர்ஸ் பிரபலமானதோ அதே போல நெல்சனால் ஷோ கேஸ் என்ற ஒரு வார்த்தையும் இப்போது பிரபலமாகியுள்ளது. டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் வழக்கம் போல் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். தலைவர் இந்தப் படத்தில் மூன்று விதமான கோணங்களில் நடித்திருப்பதாக தெரிகிறது. ஆக்ஷனும் இருக்கு, காமெடியும் இருக்கு, அசால்ட்டும் இருக்கு என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : எம்.எஸ்.வியை ஏமாற்றிய எம்.ஜி.ஆர்!. கோபத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்கள்…
மேலும் படம் ரஜினி படம் இல்லை, முழுவதும் நெல்சன் படமாகவே இருக்கிறது என்றும் ரஜினியை ஒவ்வொரு ஃபிரேமிலும் நெல்சன் செதுக்கியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நெல்சனுக்கே உண்டான அந்த டார்க் காமெடியிலும் ரஜினி கலக்கியிருப்பதாக தெரிகிறது.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு நிகராக ஒரு வில்லனை கொடுக்க நெல்சன் தவறவிட்டார். அதை இந்தப் படத்தில் சரிசெய்து விட்டார் என்றும் தெரிகிறது. விநாயக்கை பார்க்கும் போதே தலை தெறித்து விடுவது போல தெரிகிறது. அந்த அளவுக்கு மிக கொடூரமாக நடித்திருப்பதாகவே தெரிகிறது.
இந்த நிலையில் படத்தில் எல்லாமே சரியாக அமைந்திருந்தாலும் முக்கியமான நடிகர்களை காட்டாமல் இருந்தது தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. படத்தில் ரஜினியுடன் முதலில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். அவர் இந்த டிரெய்லரில் இல்லை.
இதையும் படிங்க : என்னது ஒரே டேக்கில் எடுத்ததா? கிட்டத்தட்ட 4 மணி நேரமாக நடித்த கமல் – என்ன படம் தெரியுமா?
அதுமட்டுமில்லாமல் மோகன்லாலையும் டிரெய்லரில் இல்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பாடலால் ரஜினியையே தூக்கி சாப்பிட்ட தமன்னாவையும் டிரெய்லரில் காட்டப்படவில்லை என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ஒரு வேளை அவர்களின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்து சஸ்பென்ஸ் கேரக்டராக வைத்திருப்பாரோ என்றும் சொல்லப்படுகிறது.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…